செய்திகள்
வைரல் புகைப்படம்

அதிபர் டிரம்ப் தேர்தல் பிரசாரத்தில் எடுக்கப்பட்டதாக வைரலாகும் புகைப்படம்

Published On 2020-10-22 04:53 GMT   |   Update On 2020-10-22 04:53 GMT
அமெரிக்க அதிபர் டிரம்ப் தேர்தல் பிரசாரத்தின் போது எடுக்கப்பட்டதாக கூறி புகைப்படம் வைரலாகி வருகிறது.


அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 3 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இந்நிலையில், அதிபர் வேட்பாளர் டிரம்ப் தேர்தல் பிரசாரத்தின் போது எடுக்கப்பட்டதாக கூறி புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

புளோரிடாவில் டிரம்ப் பிரசாரத்தில் எடுக்கப்பட்டது எனும் தலைப்பில் புகைப்படம் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. வைரல் புகைப்படத்தில் மக்கள் கூட்டம் சூழந்த மாபெரும் தெருக்கள் கழுகு கோணத்தில் காட்சியளிக்கிறது.



உண்மையில் அந்த கூட்டம் டிரம்ப் தேர்தல் பிரசாரத்தில் எடுக்கப்படவில்லை என ஆய்வில் தெரியவந்துள்ளது. உண்மையில் இது 2018 ஆம் ஆண்டு சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற மாபெரும் இசை நிகழ்ச்சியின் போது எடுக்கப்பட்டது ஆகும். இதே புகைப்படம் சம்பந்தப்பட்ட இசை நிகழ்ச்சி வலைதளத்திலும் பதிவேற்றம் செய்யப்பட்டு இருக்கிறது.

அந்த வகையில் வைரல் புகைப்படம் டிரம்ப் பிரசாரத்தின் போது எடுக்கப்படவில்லை என்பது உறுதியாகிவிட்டது. தற்சமயம் கொரோனாவைரஸ் பாதிப்பு காரணமாக மக்கள் கூட்டம் கூடும் நிகழ்வுகளுக்கு பெரும்பாலும் அனுமதி வழங்கப்படுவதில்லை.

போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமயங்களில் போலி செய்தி பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு இருக்கின்றன.
Tags:    

Similar News