செய்திகள்
குமாரசாமி

இடைத்தேர்தலில் பண பலத்தால் வெற்றி பெற பாஜக முயற்சி: குமாரசாமி குற்றச்சாட்டு

Published On 2020-10-22 01:36 GMT   |   Update On 2020-10-22 01:36 GMT
பண பலத்தால் இடைத்தேர்தலில் வெற்றி பெற பாஜக முயற்சி செய்வதாக முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
பெங்களூரு :

முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

கர்நாடக சட்டசபையில் 2 தொகுதிகளுக்கு அடுத்த மாதம் (நவம்பர்) 3-ந்தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இதில் பண பலத்தால் வெற்றி பெற பா.ஜனதா முயற்சி செய்கிறது. ஆனால் சிரா தொகுதியில் பண பலத்தால் அக்கட்சி வெற்றி பெற முடியாது. கே.ஆர்.பேட்டையில் வெற்றி பெற்றது போல் சிராவில் வெற்றி பெறுவதாக பா.ஜனதா சொல்கிறது. இங்கு அது சாத்தியமில்லை. அன்று இடைபெற்ற இடைத்தேர்தலுக்கும், இப்போது நடைபெறும் இடைத்தேர்தலுக்கும் வித்தியாசம் உள்ளது. எல்லா நாளும் ஞாயிறு கிடையாது. நளின்குமார் கட்டீல் வாய்க்கு வந்தபடி பேச முடியாது.

நான் முதல்-மந்திரியாக இருந்தபோது எப்படி இருந்தேன் என்பது மக்களுக்கு தெரியும். என்னை போல் மக்களுக்கு பணியாற்றியவர் வேறு யாரும் கிடையாது. ஆட்சி அதிகாரம் இல்லாவிட்டாலும் மக்கள் என் வீட்டை தேடி வருகிறார்கள். நளின்குமார் கட்டீல் எத்தனை ஏழை மக்களுக்கு உதவி செய்துள்ளார்?. எனக்கும், சிரா தொகுதி மக்களுக்கும் இடையே நல்லுறவு உள்ளது. இது அந்த தொகுதி மக்களுக்கு தெரியும். காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணி ஆட்சியில் நான் முதல்-மந்திரியாக பணியாற்றினேன்.

அப்போது கூட்டணி ஆட்சியை காப்பாற்றுவதாக காங்கிரஸ் தலைவர்கள் அடிக்கடி கூறினர். ஆனால் உள்ளுக்குள் என்ன செய்தனர் என்பது தற்போது வெளியே வருகிறது. கூட்டணி ஆட்சியை கவிழ்க்க டி.கே.சிவக்குமார் முயற்சி செய்ததாக துணை முதல்-மந்திரி அஸ்வத்நாராயண் கூறியுள்ளார். அவர் இன்னும் விவரமான தகவல்களை வெளியிட வேண்டும். இது மக்களுக்கு தெரிய வேண்டும். இடைத்தேர்தலில் மக்கள் நல்ல முடிவு எடுக்க வேண்டும்.

இவ்வாறு குமாரசாமி கூறினார்.
Tags:    

Similar News