செய்திகள்
திருப்பதி கோவில்

திருப்பதியில் இலவச தரிசன அனுமதி கோரி தேவஸ்தான நிர்வாக அலுவலகம் முற்றுகை

Published On 2020-10-21 02:54 GMT   |   Update On 2020-10-21 02:54 GMT
இலவச தரிசனத்திற்கு அனுமதி வழங்கக்கோரி திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாக அலுவலகத்தை விசுவஇந்து பரிஷத் அமைப்பினர், பா.ஜ.க.வினர் மற்றும் பக்தர்கள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருமலை:

கொரோனா ஊரடங்கு தளர்வுக்கு பிறகு திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினமும் 3 ஆயிரம் இலவச தரிசன டிக்கெட்டுகள் வழங்கப்பட்டது. பின்னர் தொற்று அதிகரித்ததால் இலவச தரிசன டிக்கெட்டுகள் வழங்குவது நிறுத்தப்பட்டது. ரூ.300 விரைவு தரிசனம், ரூ.1,000 கல்யாண உற்சவம், ரூ.10 ஆயிரம் நன்கொடை வழங்கும் பக்தர்கள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் சிபாரிசு கடிதங்களுக்கான விரைவு தரிசனம் என்று கட்டண தரிசனத்தில் மட்டும் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், இலவச தரிசனத்திற்கு அனுமதி வழங்கக்கோரியும் திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாக அலுவலகத்தை விசுவஇந்து பரிஷத் அமைப்பினர், பா.ஜ.க.வினர் மற்றும் பக்தர்கள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சிலர் பஜனைகள் பாடியும், சிலர் ரோட்டில் படுத்தும் போராட்டம் நடத்தினர்.
Tags:    

Similar News