செய்திகள்
சி.டி.ரவி

டி.கே.சிவக்குமாரின் கலாசாரத்தை அனுமதிக்க மாட்டோம்: சி.டி.ரவி

Published On 2020-10-21 01:46 GMT   |   Update On 2020-10-21 01:46 GMT
அத்துமீறுவது, கல்வீசுவது போன்ற டி.கே.சிவக்குமாரின் கலாசாரத்தை அனுமதிக்க மாட்டோம் என்று பா.ஜனதா தேசிய பொதுச் செயலாளர் சி.டி.ரவி கூறியுள்ளார்.
சித்ரதுர்கா :

பா.ஜனதா தேசிய பொதுச் செயலாளர் சி.டி.ரவி சித்ரதுர்காவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

மிரட்டி, உருட்டி அரசியல் செய்வது டி.கே.சிவக்குமாரின் செயல்பாடு. ஜனநாயகத்தில் யாராலும் மிரட்டி அரசியல் செய்ய முடியாது. அத்துமீறுவது, வீடுகள் மீது கல் வீசுவது போன்றவை எங்களின் கலாசாரம் இல்லை. அது டி.கே.சிவக்குமாரின் கலாசாரம். டி.கே.சிவக்குமாரின் கலாசாரத்தை மாநிலத்தில் ஏற்படுத்த நாங்கள் அனுமதிக்க மாட்டோம். எடியூரப்பா அரசு கமிஷன் அரசு என்று சித்தராமையா குற்றம்சாட்டியுள்ளார்.

அவர் தனது ஆட்சியில் இருந்த நிலையை எடுத்துக்கூறி குற்றம்சாட்டியுள்ளார். இப்போது “கமிஷன்“ விவகாரம் இல்லை. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட முதல்-மந்திரி எடியூரப்பா நேரில் பார்வையிட உள்ளார். அவர் நாளை (அதாவது இன்று) கலபுரகிக்கு செல்கிறார். அதற்கு முன்பு அந்த மாவட்டங்களின் கலெக்டர்களுடன் காணொலியில் ஆலோசனை நடத்தி, நிவாரண பணிகளை மேற்கொள்ளும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

எங்கள் கட்சியில் பிற கட்சிகளில் இருந்து வந்தவர்கள் மற்றும் அடிப்படை பா.ஜனதாவினர் என்ற பேதம் இல்லை. காங்கிரஸ், ஜனதா தளம்(எஸ்) கட்சிகள் தான் மேல்-சபை மற்றும் மாநிலங்களவைக்கு குதிரை சூதாட்டத்தில் ஈடுபட்டவர்களை அனுப்பி வைத்தன. ஆனால் பா.ஜனதாவில் தொண்டர்களே அதிபர்கள். அதனால் அசோக் கஸ்தி போன்ற சாமானிய தொண்டர்களை மாநிலங்களவைக்கு அனுப்பினோம்.

இவ்வாறு சி.டி.ரவி கூறினார்.
Tags:    

Similar News