தெற்கு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்த முகமது அஷ்ரப் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
ஸ்ரீநகர்:
தெற்கு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தவர் முகமது அஷ்ரப். இவர் நேற்று முன்தினம் மாலை அங்குள்ள மசூதியில் தொழுகை நடத்தி விட்டு வீட்டு சென்று கொண்டிருந்தார்.
இரவு சன்ட்போரா கானேல்வான் பகுதியில் வந்து கொண்டிருந்த போது துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டார். பயங்கரவாதிகள் அவரை சுட்டுக்கொன்று இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். போலீஸ் இன்ஸ்பெக்டர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு காஷ்மீரின் முன்னாள் முதல்-மந்திரிகள் உமர் அப்துல்லா, மெபூபா முப்தி உள்ளிட்ட காஷ்மீர் அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.