செய்திகள்
கோப்புப்படம்

ஆந்திராவில் வரும் நவ.2 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்க அரசு அனுமதி

Published On 2020-10-20 18:14 GMT   |   Update On 2020-10-20 18:25 GMT
ஆந்திராவில் வரும் நவம்பர் 2 ஆம் தேதி முதல் பள்ளிகளை திறக்க அம்மாநில அரசு அனுமதி கொடுத்துள்ளது.
அமராவதி:

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் பள்ளிகள் மூடப்பட்டன. கடந்த ஜுன் மாதம் முதல் தளர்வுகளை அறிவித்து வரும் மத்திய அரசு,  கடந்த மாதம்  முதல் பள்ளிகளை திறக்க அனுமதி அளித்தது. எனினும், இவ்விவகாரத்தில் மாநில அரசுகள் இறுதி முடிவு எடுத்துக்கொள்ளலாம் எனவும் உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியது.  இதனால், பல்வேறு மாநிலங்களும் பள்ளிகள் திறப்பது குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகின்றன.

இந்த நிலையில், ஆந்திராவில் வரும் நவம்பர் 2 ஆம் தேதி முதல் பள்ளிகளை திறக்க அம்மாநில அரசு அனுமதி கொடுத்துள்ளது.  இன்று காணொலி வாயிலாக உரையாற்றிய ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி இந்த அறிவிப்பை வெளியிட்டார்.  ஒற்றைப்படை எண்களில் உள்ள வகுப்புகள் ஒரு நாளும், இரட்டைப்படை எண்கள் கொண்ட வகுப்புகள் ஒரு நாளும் என,  காலை நேரத்தில் மட்டுமே வகுப்புகள் நடைபெறும் எனவும் வழிகாட்டுதலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நவம்பர் மாதத்திற்கு மட்டுமே இந்த முறையில் வகுப்புகள் நடைபெறும் எனவும் அதன்பிறகு சூழலை  மதிப்பிட்டு டிசம்பரில் பள்ளிகள் செயல்படுவது தொடர்பாக அந்த நேரத்தில் அறிவிப்பு வெளியாகும் எனவும் ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்துள்ளார்.
Tags:    

Similar News