செய்திகள்
அரவிந்த் கெஜ்ரிவால்

தெலுங்கானா வெள்ள பாதிப்பு - ரூ.15 கோடி நிதியுதவி வழங்கிய டெல்லி முதல் மந்திரி

Published On 2020-10-20 13:20 GMT   |   Update On 2020-10-20 13:20 GMT
தெலுங்கானாவில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புக்கு நிவாரண தொகையாக டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் ரூ.15 கோடி வழங்கியுள்ளார்.
புதுடெல்லி:

வடகிழக்கு பருவமழையையொட்டி தெலுங்கானாவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.  எனினும், தெலுங்கானாவில் கடந்த சனி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களுக்கு இடைப்பட்ட 24 மணிநேரத்தில் பெய்த கனமழையானது (72.5 மி.மீ.), கடந்த 10 ஆண்டுகளில் அக்டோபரில் பெய்த 3வது அதிக மழை பொழிவாகும்.

தெலுங்கானாவில் கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கனமழை பெய்துள்ளது.  தெலுங்கானாவில் பெய்து வரும் கனமழை தொடர்புடைய சம்பவங்களில் சிக்கி கடந்த ஒரு வாரத்தில் 70 பேர் பலியாகி உள்ளனர்.

கனமழை மற்றும் வெள்ளம் சூழ்ந்த நிலையில் பலர் தங்களது வீடுகளை இழந்துள்ளனர்.  பலர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

இந்நிலையில், தெலுங்கானாவில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புக்கு நிவாரண தொகையாக டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் ரூ.15 கோடி வழங்கியுள்ளார்.

கனமழை மற்றும் வெள்ளம் ஆகியவற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள ஐதராபாத்தின் சகோதர, சகோதரிகளுக்கு டெல்லி துணையாக நிற்கும்.  வெள்ள மீட்பு நடவடிக்கைகளுக்கும் உதவி செய்யும் என்று அவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
Tags:    

Similar News