செய்திகள்
வாகன ஓட்டியிடம் அபராதம் வசூல்

36 முறை விதிமுறைகளை மீறியதாக வாகன ஓட்டியிடம் ரூ.18 ஆயிரம் அபராதம் வசூல்

Published On 2020-10-20 01:49 GMT   |   Update On 2020-10-20 01:49 GMT
பெங்களூருவில் 36 முறை விதிமுறைகளை மீறியதாக வாலிபரிடம் இருந்து ரூ.18 ஆயிரத்து 100 அபராதம் வசூலிக்கப்பட்டு இருப்பதாக பேடராயனபுரா போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர்.
பெங்களூரு :

பெங்களூரு பேடராயனபுரா போக்குவரத்து போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரை தடுத்து நிறுத்தி ஆவணங்களை சரிபார்த்தனர். அந்த வாலிபரிடம் ஓட்டுனர் உரிமம் உள்ளிட்ட பிற ஆவணங்கள் இல்லை என்று தெரியவந்தது.

மேலும் அந்த வாலிபருடைய மோட்டார் சைக்கிள் பதிவு எண்ணை ஆய்வு செய்தபோது ஏற்கனவே 34 முறை போக்குவரத்து விதிமுறைகளை மீறி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அதாவது சிக்னலை மதிக்காமல் சென்றது, ஹெல்மெட் அணியாமல் சென்றது என 34 முறை அந்த வாலிபர் விதிமுறைகளை மீறி மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்றது தெரியவந்தது.

இதையடுத்து, ஓட்டுனர் உரிமம் இல்லாதது, பிற ஆவணங்கள் இல்லாதது என 2 வழக்குகள் பதிவு செய்ததுடன், ஏற்கனவே இருந்த 34 வழக்குகள் என ஒட்டு மொத்தமாக 36 வழக்குகளில், அந்த வாலிபரிடம் இருந்து ரூ.18 ஆயிரத்து 100 அபராதம் வசூலிக்கப்பட்டு இருப்பதாக பேடராயனபுரா போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர்.
Tags:    

Similar News