செய்திகள்
நீட் தேர்வு

புள்ளி விவரங்களில் குளறுபடி... நீட் தேர்வு முடிவுகள் இணையதளத்தில் இருந்து நீக்கம்

Published On 2020-10-17 05:19 GMT   |   Update On 2020-10-17 07:58 GMT
நீட் தேர்வு முடிவுகள் தொடர்பான புள்ளிவிவர அறிவிப்பில் குளறுபடி கண்டறியப்பட்டதையடுத்து தேர்வு முடிவுகள் இணையதளத்தில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டன.
புதுடெல்லி:

நீட் தேர்வு முடிவுகள் நேற்று மாலை வெளியிடப்பட்டன. மொத்தம் 13.66 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதிய நிலையில், 7 லட்சத்து 71,500 (56.44%) பேர் தேர்ச்சி பெற்று மருத்துவம் படிக்க தகுதி பெற்றுள்ளனர். தேர்வு முடிவுகள் தேசிய தேர்வு முகமையின் இணையதளத்தில் வெளியிடப்பட்டன. இந்திய அளவில், மாநில அளவில் தேர்ச்சி விகிதம் உள்ளிட்ட அனைத்து தகவல்களுடன் கூடிய புள்ளிவிவர பட்டியலும் வெளியிடப்பட்டது.

இந்த புள்ளிவிவரங்களில் குளறுபடிகள் ஏற்பட்டது தெரியவந்தது. குறிப்பாக, எழுதிய மாணவர்களை விட அதிக தேர்ச்சி, மாநில தேர்ச்சி விகிதத்தில் ஏற்ற இறக்கம் என பல்வேறு குளறுபடிகள் இருந்ததால் சர்ச்சை எழுந்தது. மாணவர்கள் மற்றும் பெற்றோரும் குழப்பம் அடைந்தனர்.


நீட் தேர்வு அறிவிப்பில் குளறுபடி ஏற்பட்டதையடுத்து, தேசிய தேர்வு முகமை இணையதளத்தில் இருந்து தேர்வு முடிவு தற்காலிகமாக நீக்கப்பட்டது. புள்ளிவிவரத்தில் திருத்தம் செய்யப்பட்டு மீண்டும் இணையதளத்தில் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Tags:    

Similar News