செய்திகள்
கொரோனா உயிரிழப்பு தொடர்பான வரைபடம்

கொரோனா தடுப்பில் சிறந்து விளங்கும் 22 மாநிலங்கள்... உயிரிழப்பு தேசிய சராசரியை விட குறைவு

Published On 2020-10-16 06:13 GMT   |   Update On 2020-10-16 10:41 GMT
கொரோனாவால் ஏற்படும் மரணங்களில் தேசிய சராசரியை விட 22 மாநிலங்களில் குறைவான மரணங்கள் ஏற்பட்டிருப்பதாக சுகாதாரத்துறை குறிப்பிட்டுள்ளது.
புதுடெல்லி:

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வந்தாலும், நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் மக்களின் ஒத்துழைப்பு காரணமாக குணமடையும் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதேசமயம் உலக அளவில் உயிரிழப்பு மிக குறைவாக உள்ள நாடுகளில் இந்தியாவும் ஒன்று.

ஒரு மில்லியன் மக்களில் கொரோனா பாதிப்பினால் மிகக் குறைந்த அளவில் மரணம் ஏற்படும் நாடுகள் பட்டியலில் இந்தியா நீடிக்கிறது. இந்தியாவில் தற்போது ஒரு மில்லியன் மக்களில் சராசரியாக 80 பேர் உயிரிழக்கின்றனர். 


மேலும், 22 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் நோய்த்தடுப்பில் சிறப்பாக செயல்படுவதாகவும், ஒரு மில்லியன் மக்களில் ஏற்படும் மரணங்களில் தேசிய சராசரியை விட மிகக் குறைந்த இறப்புகள் பதிவாகியிருப்பதாகவும் சுகாதாரத்துறை குறிப்பிட்டுள்ளது.

இது தொடர்பான புள்ளிவிவர வரைபடத்தை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.
Tags:    

Similar News