செய்திகள்
பெண்களுக்கு எதிரான பாலியல்

பெண்களுக்கு எதிரான பாலியல் வழக்குகளில் பெங்களூருவுக்கு 3-வது இடம்

Published On 2020-10-14 01:57 GMT   |   Update On 2020-10-14 01:57 GMT
கடந்த ஆண்டு பெண்களுக்கு எதிரான பாலியல் வழக்குகளில் பெங்களூரு 3-வது இடத்தை பிடித்து உள்ளதாக, தேசிய குற்றப்பிரிவு காப்பக ஆணையம் கூறியுள்ளது.
பெங்களூரு :

தேசிய குற்றப்பிரிவு காப்பக ஆணையம் ஒவ்வொரு ஆண்டும் பெண்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகள், பெண்கள் சந்திக்கும் பாலியல் தொல்லைகள், பெண்களுக்கு எதிரான பாலியல் வழக்குகள் குறித்து அறிக்கை வெளியிட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த 2019-ம் ஆண்டு பெண்களுக்கு எதிரான பாலியல் வழக்குகள் குறித்து ஒரு அறிக்கை வெளியிட்டு உள்ளது. அந்த அறிக்கையில் கூறப்பட்டு இருந்ததாவது:-

கடந்த 2018-ம் ஆண்டு பெண்களுக்கு எதிரான பாலியல் வழக்குகளில் நகரங்களின் அடிப்படையில் டெல்லி முதல் இடமும், மும்பை 2-வது இடமும், காசியாபாத் 3-வது இடமும், கான்பூர் 4-வது இடமும் பிடித்து இருந்தது. பெங்களூரு 5-வது இடத்தில் இருந்தது.

இந்தநிலையில் கடந்த ஆண்டும் (2019) டெல்லி 431 வழக்குகளுடன் முதல் இடத்திலும், 377 வழக்குகளுடன் மும்பை 2-வது இடத்திலும், 158 வழக்குகளுடன் பெங்களூரு 3-வது இடத்திலும், 117 வழக்குகளுடன் கான்பூர் 4-வது இடத்திலும், 115 வழக்குகளுடன் நாக்பூர் 5-வது இடத்திலும், 114 வழக்குகளுடன் காசியாபாத் 6-வது இடத்திலும், 110 வழக்குகளுடன் புனே 7-வது இடத்திலும், 103 வழக்குகளுடன் அகமதாபாத் 8-வது இடத்திலும், 83 வழக்குகளுடன் கொச்சி 9-வது இடத்திலும், 82 வழக்குகளுடன் இந்தூர் 10-வது இடத்திலும் உள்ளது.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
Tags:    

Similar News