செய்திகள்
ராகுல் காந்தி

வேளாண் சட்டங்கள் மூலம் மோடி அரசு விவசாயிகளுக்கு துரோகம் இழைத்து விட்டது - ராகுல் காந்தி

Published On 2020-10-13 22:38 GMT   |   Update On 2020-10-13 22:38 GMT
வேளாண் சட்டங்கள் மூலம் மோடி அரசு விவசாயிகளுக்கு துரோகம் இழைத்து விட்டதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
புதுடெல்லி:

மத்திய அரசு கொண்டுவந்துள்ள 3 வேளாண் சட்டங்கள் விவசாயிகளின் நலன்களுக்கு தீங்கு விளைவிக்கும் வகையிலும் பெருநிறுவனங்களுக்கு பயன் அளிக்கும் விதமாகவும் இருப்பதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றன. மேலும் இந்த விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் மத்திய அரசுக்கு எதிராக பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றன.

அதேபோல் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி வேளாண் சட்டங்கள் விவகாரத்தில் மத்திய அரசை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்.

அந்த வகையில் தற்போது வேளாண் சட்டங்கள் மூலம் மோடி அரசு விவசாயிகளுக்கு துரோகம் இழைத்து விட்டதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப் மற்றும் அரியானாவில் டிராக்டர் பேரணி மற்றும் பொதுக்கூட்டங்களில் தான் கலந்துகொண்டது தொடர்பான வீடியோவுடன் ராகுல் காந்தி டுவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் “விவசாயிகள் நாட்டுக்கு உணவு பாதுகாப்பை கொடுத்தனர். ஆனால் மோடி அரசு அவர்களுக்கு துரோகம் இழைத்ததை தவிர வேறு எதையும் செய்யவில்லை” என குறிப்பிட்டுள்ளார்.
Tags:    

Similar News