செய்திகள்
மம்தா பானர்ஜி

பாஜகவுக்கு மக்கள் செத்தால் கூட கவலை இல்லை: மம்தா பானர்ஜி

Published On 2020-10-13 02:35 GMT   |   Update On 2020-10-13 02:35 GMT
பா.ஜனதாவுக்கு மக்கள் செத்தால் கூட கவலை இல்லை. ஆட்சியை பிடிப்பதில்தான் ஆர்வமாக இருக்கிறது என்று மம்தா பானர்ஜி பா.ஜனதாவை கடுமையாக விமர்சித்துள்ளார்.
கொல்கத்தா :

சமீபத்தில் கொல்கத்தாவில் பா.ஜனதா நடத்திய பேரணியில் வன்முறை வெடித்தது. இந்த நிலையில், கொல்கத்தாவில் நேற்று நடைபெற்ற திரிணாமுல் காங்கிரஸ் கட்சி பத்திரிகை நிகழ்ச்சியில், அக்கட்சியின் தலைவரும், முதல்-மந்திரியுமான மம்தா பானர்ஜி, பா.ஜனதாவை கடுமையாக விமர்சித்தார்.

அவர் பேசியதாவது:-

ஒருபுறம் நாட்டை கொரோனாவும், டெங்குவும் தாக்கி உள்ளன. மற்றொரு புறம் மிகப்பெரிய பெருந்தொற்றான பா.ஜனதா தாக்கி உள்ளது. பா.ஜனதா ஒரு தீயசக்தி. மேற்கு வங்காளத்தில் அரசியலில் ஈடுபடுவதாக இருந்தால், நமது கலாசாரத்தின் அங்கமாக உள்ள ஒருசில நெறிமுறைகளுக்கு உட்பட்டு செயல்பட வேண்டும்.

ஆனால், பா.ஜனதாவுக்கு மக்கள் செத்தால் கூட கவலை இல்லை. ஆட்சியை பிடிப்பதில்தான் ஆர்வமாக இருக்கிறது. அதற்காக வன்முறையை தூண்டிவிட முயற்சிக்கிறது. ஆனால், ஆட்சியை பிடிப்பது எளிதல்ல என்று சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.

துர்கா பூஜை குழுக்கள், கொரோனா விதிமுறைகளுக்கு உட்பட்டு செயல்பட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.
Tags:    

Similar News