செய்திகள்
சித்தராமையா

பெங்களூருவில் சொத்துவரியை உயர்த்தக்கூடாது: சித்தராமையா

Published On 2020-10-13 01:42 GMT   |   Update On 2020-10-13 01:42 GMT
பெங்களூரு மாநகராட்சி சொத்து வரியை உயர்த்த முடிவு செய்துள்ளது. சொத்து வரியை உயர்த்துவதற்கு பதிலாக அதனை குறைக்க முதல்-மந்திரி எடியூரப்பா நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சித்தராமையா வலியுறுத்தியுள்ளார்.
பெங்களூரு :

கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

பெங்களூரு மாநகராட்சி சொத்து வரியை உயர்த்த முடிவு செய்துள்ளது. இந்த உயர்வை அமல்படுத்தினால் அது நகரின் வளர்ச்சிக்கு பெரிதும் பாதிக்கும். கொரோனா நெருக்கடி காரணமாக பொதுமக்கள் ஏற்கனவே நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளனர். ஏற்கனவே உள்ள சொத்து வரியை செலுத்தவே அவர்கள் திண்டாடுகிறார்கள். அதனால் சொத்து வரியை உயர்த்துவதற்கு பதிலாக அதனை குறைக்க முதல்-மந்திரி எடியூரப்பா நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சொத்து வரியை உயர்த்தினால் அதனால் வீட்டு வாடகையும் உயரும். இதனால் சிறுதொழில்கள் பெரிதும் பாதிக்கப்படும். நடுத்தர மற்றும் ஏழை மக்கள் வீட்டு வாடகை கொடுக்க முடியாமல் பாதிக்கப்படுவார்கள். இந்த நெருக்கடியான தருணத்தில் முதல்-மந்திரி எடியூரப்பா மக்களின் பக்கம் நிற்க வேண்டும்.

இவ்வாறு சித்தராமையா தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News