செய்திகள்
உச்ச நீதிமன்றம்

வேளாண் சட்டங்களுக்கு எதிராக இந்திய கம்யூனிஸ்ட் எம்பி பினோய் விஸ்வம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு

Published On 2020-10-12 03:05 GMT   |   Update On 2020-10-12 03:05 GMT
வேளாண் சட்டங்களுக்கு எதிராக இந்திய கம்யூனிஸ்ட் எம்பி பினோய் விஸ்வம் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
புதுடெல்லி:

கடந்த பாராளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில், எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் விவசாயம் தொடர்பான மூன்று மசோதாக்களை மத்திய அரசு கொண்டுவந்து நிறைவேற்றியது. இதற்கு, குடியரசுத் தலைவர் சட்ட ஒப்புதல் வழங்கிய நிலையில் அது சட்டமாகி உள்ளது. இந்த மசோதாக்கள் மீதான விவாதத்தின்போது பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கடுமையான வாதங்களை வைத்தன.

வேளாண் சட்டங்களுக்கு எதிராக எதிர்க்கட்சிகள், விவசாய அமைப்புகள் போராட்டங்கள் நடத்தி வருகின்றன. தமிழகத்தில் திமுக தலைமையில் தோழமைக் கட்சிகளுடன் இணைந்து போராட்டம் நடத்தியது.

அத்துடன், வேளாண் சட்டங்குகளுக்கு எதிராக திமுக சார்பில் திருச்சி சிவா எம்பி, கேரள மாநில காங்கிரஸ் எம்பி பிரதாபன் உள்ளிட்டோர் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளனர்.

இந்நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் பினோய் விஸ்வமும், விவசாய சட்டங்களுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்திய அரசியலமைப்பின் கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிராக இந்த சட்டங்கள் இருப்பதால் இந்த சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்று மனுவில் கூறி உள்ளார். 
Tags:    

Similar News