செய்திகள்
விபத்தை ஏற்படுத்திய சொகுசு கார்

நடைபாதையில் சென்றுகொண்டிருந்தவர்கள் மீது பாய்ந்த சொகுசு கார் - ஒருவர் பலி

Published On 2020-10-11 17:47 GMT   |   Update On 2020-10-11 17:47 GMT
தெலுங்கானாவில் வேகமாக வந்த சொகுசு கார் கட்டுப்பாட்டை இழந்து நடைபாதையில் சென்றுகொண்டிருந்தவர்கள் மீது பாய்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் நடைபாதையில் சென்றுகொண்டிருந்த ஒரு நபர் உயிரிழந்தார்.
ஐதராபாத்:

தெலுங்கானா மாநிலம் மதப்பூர் நகரில் உள்ள 100 அடி சாலையில் இன்று வழக்கம்போல வாகனங்கள் சென்றுகொண்டிருந்தன. சாலையின் அருகே உள்ள நடைபாதையில் சிலர் நடைபயணம் மேற்கொண்டு இருந்தனர்.

மாலை 3.15 அணியளவில் ஜூப்லி கில்ஸ் பகுதியில் இருந்து மதப்பூர் நோக்கி வேகமாக வந்துகொண்டிருந்த பேராரே என்ற சொகுசுகார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையை விட்டு விலகி நடைபாதையில் நடந்து கொண்டிருந்தவர்கள் மீது பயங்கரவேகத்தில் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த கோரவிபத்தில் நடைபாதையில் சென்றுகொண்டிருந்த பாபு என்ற 50 வயது நிரம்பிய முதியவர் சம்பவ இடத்திலேயே உடல்நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், ஒருவர் படுகாயமடைந்தார். மோதலை ஏற்படுத்திய கார் அதிவேகத்தில் சாலையின் நடுவே திரும்பிய கோணத்தில் நின்றது.

இந்த விபத்து குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். மேலும், விபத்தில் உயிரிழந்த முதியவரின் உடலைகைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், காயமடைந்தவரை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் சொகுசு காரின் டிரைவரை கைது செய்துள்ளனர். ஆனால், இந்த விபத்தை ஏற்படுத்தியது நவீன் குமார் என்ற நபர் என்பதும் அவரால் தான் விபத்து ஏற்பட்டதாகவும், ஆனால் அவரை தற்போது வரை போலீசார் கைது செய்யவில்லை என்றும் குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளனர்.   
Tags:    

Similar News