செய்திகள்
நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தலைமையில் ஆலோசனை கூட்டம்

ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் தொடங்கியது- நிலுவைத் தொகையை வழங்க மாநிலங்கள் வலியுறுத்தல்

Published On 2020-10-05 06:48 GMT   |   Update On 2020-10-05 06:49 GMT
மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தலைமையில் 42வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் தொடங்கியது.
புதுடெல்லி:

ஜிஎஸ்டி இழப்பீடு வழங்கும் விவகாரத்தில் மத்திய அரசு பரிந்துரைத்த திட்டத்தை பல்வேறு மாநிலங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. குறிப்பாக, பாஜக ஆட்சியில் இல்லாத மேற்கு வங்கம், பஞ்சாப், கேரளம் போன்ற மாநிலங்கள் இந்த திட்டத்தை ஏற்றுக் கொள்ளவில்லை. மத்திய அரசுக்கு கடும் எதிா்ப்புகளை தெரிவித்து வருகின்றன.

இந்த பரபரப்பான சூழ்நிலையில், 42வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் இன்று மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தலைமையில் தொடங்கியது. அவருடன் இணை மந்திரி அனுராக் தாக்கூர் கூட்டத்தில் பங்கேற்றார். காணொளி வாயிலாக நடைபெறும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் மாநில நிதியமைச்சர்கள் கலந்துகொண்டுள்ளனர்.

மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய ஜிஎஸ்டி இழப்பீட்டு தொகை குறித்து இந்த கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்திற்கான நிலுவைத்தொகை ரூ.4375 கோடியை மத்திய அரசு விரைந்து வழங்கும்படி வலியுறுத்தப்பட்டது.

நடப்பு நிதிஆண்டில் மாநிலங்களுக்கு ரூ.2.35 லட்சம் கோடி அளவுக்கு ஜிஎஸ்டி வருவாய் பற்றாக்குறை இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது. இதில் மத்திய அரசு வழங்க வேண்டிய இழப்பீட்டுத் தொகைரூ.97 ஆயிரம் கோடியாகும். மேலும் கொரோனா ஊரடங்கு காலத்தில் வர வேண்டிய வரி வருமான இழப்பு ரூ.1.38 லட்சம் கோடியாகும்.

மத்திய அரசு வழங்க வேண்டிய இழப்பீட்டுத் தொகைக்காக இரண்டு விதமான பரிந்துரைகளை கடந்த ஆகஸ்ட் மாதம் பரிந்துரைத்திருந்தது. இதன்படி இழப்பீட்டுத் தொகையான ரூ.2.35 லட்சம் கோடியை ரிசர்வ் வங்கியிடம் கடனாகவோ அல்லது வெளிச்சந்தையிலோ மாநில அரசுகள் திரட்டிக் கொள்ளலாம் என யோசனை தெரிவிக்கப்பட்டிருந்தது. மாநில அரசுகள் கடன் திரட்டும் முடிவுக்கு தமிழ்நாடு, மேற்கு வங்கம், கேரளா, டெல்லி, தெலங்கானா, சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்கள் தங்களது எதிர்ப்பை மத்திய அரசு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News