செய்திகள்
விவசாயிகள் ரெயில் மறியல்

அரசியல் கட்சிகள் பாராளுமன்றத்தில் ஏதாவது செய்திருக்கவேண்டும் -பஞ்சாப் போராட்டக்களத்தில் விவசாயி பேச்சு

Published On 2020-10-05 04:06 GMT   |   Update On 2020-10-05 04:06 GMT
வேளாண் சட்டங்கள் விஷயத்தில் அரசியல் கட்சிகள் அரசியல் நாடகமாடுவதாக பஞ்சாப் மாநிலத்தில் போராடும் விவசாயிகளில் ஒருவர் குறிப்பிட்டார்.
சண்டிகர்:

மத்திய அரசின்  வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப் மாநிலத்தில் விவசாயிகள் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. பல்வேறு விவசாய சங்கங்கள் சார்பில் காலவரையற்ற ரெயில் மறியல் போராட்டம் நடைபெறுகிறது. விவசாயிகளின் போராட்டத்திற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் ஆதரவு தெரிவித்து களத்தில் இறங்கி உள்ளன.

இந்நிலையில், பஞ்சாப் மாநிலத்தில் விவசாய சங்கமான கிசான் மஸ்தூர் சங்கர்ஷ் கமிட்டி சார்பில் 12வது நாளாக ரெயில் மறியல் போராட்டம் நடைபெறுகிறது. மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பியவண்ணம் உள்ளனர். குறிப்பாக குறைந்தபட்ச ஆதார விலை தொடர வேண்டும் என வலியுறுத்தி பதாகை வைத்துள்ளனர். 

போராட்டத்தில் பங்கேற்றுள்ள ஒரு விவசாயி, வேளாண் சட்டங்களுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நடத்தி வரும் போராட்டம் குறித்து பேசினார்.

‘அரசியல் கட்சிகள் அரசியல் நாடகமாடுகின்றன. அவர்கள் ஏதாவது செய்ய வேண்டியிருந்தால், அவர்கள் அதை பாராளுமன்றத்தில் செய்திருக்க வேண்டும்’ என்று அந்த விவசாயி கூறினார்.
Tags:    

Similar News