செய்திகள்
கோப்பு படம்

டெல்லியில் அக்டோபர் 31 வரை பள்ளிகள் திறப்பு இல்லை - கல்வி மந்திரி தகவல்

Published On 2020-10-04 10:26 GMT   |   Update On 2020-10-04 10:26 GMT
கொரோனா தொடர்ந்து அதிகரித்து வருவதால் தலைநகர் டெல்லியில் இம்மாத இறுதி வரை பள்ளிகள் திறக்கப்படாது என டெல்லி கல்வி மந்திரி மணீஷ் சிசோடியா தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:

இந்தியாவில் 5-ம் கட்ட கொரோனா ஊரடங்கு அக்டோபர் 31-ம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. ஊரடங்கு நீட்டிக்கப்பட்டாலும் அதில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக திரையரங்குகள், உணவகங்கள் போன்றவை வரும் 15-ம் தேதி முதல் செல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதேபோல், பள்ளி, கல்லூரிகள், கல்வி நிறுவனங்கள், பயிற்சி நிறுவனங்கள் திறப்பு குறித்து அக்டோபர் 15-ம் தேதிக்குப் பின்னர் மாநிலங்கள் முடிவெடுக்கலாம் எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதையடுத்து, புதுச்சேரியில் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை வருகிற 8-ந்தேதி முதல் வகுப்புகள் தொடங்க உள்ளதாக அரசு அறிவித்து.

அதேபோல், வேறு சில மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் பள்ளிகளை திறப்பது குறித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர். சில மாநிலங்களில் விருப்பத்தின் பெயரில் மாணவர்கள் பள்ளிக்கு வர அனுமதி வழங்கப்பட்டு வகுப்புகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், தலைநகர் டெல்லியில் பள்ளிகள் திறப்பு குறித்து டெல்லி கல்வித்துறை மந்திரி மணீஷ் சிசோடியவிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த சிசோடியா,’டெல்லியில் உள்ள அனைத்து பள்ளிகளும் அக்டோபர் 31-ம் தேதி வரை திறக்கப்படாது எனவும், கொரோனா பரவலை கருத்தில் கொண்டே பள்ளி திறப்பு குறித்த அடுத்தகட்ட முடிவுகள் எடுக்கப்படும்’ என தெரிவித்தார்.

Tags:    

Similar News