செய்திகள்
ஜே.பி. நட்டா

அடல் சுரங்கப்பாதை எல்லை உள்கட்டமைப்பை பலப்படுத்தும் - ஜே.பி. நட்டா பெருமிதம்

Published On 2020-10-04 01:23 GMT   |   Update On 2020-10-04 01:23 GMT
அடல் சுரங்கப்பாதை எல்லை உள்கட்டமைப்பை பலப்படுத்தும் என்று பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி. நட்டா தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:

இமாசலப்பிரதேச மாநிலத்தில் மணாலி-லே இடையே அமைக்கப்பட்டுள்ள உலகிலேயே மிக நீளமான அடல் சுரங்கப்பாதையை பிரதமர் மோடி நேற்று திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார். 

இது குறித்து பேசிய பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி. நட்டா, “மூலோபய முக்கியத்துவம் வாய்ந்த அடல் சுரங்கப்பாதை இணைப்பை மட்டுமல்ல நமது எல்லை உள்கட்டமைப்பையும் பலப்படுத்தும். உலகத் தரம் வாய்ந்த எல்லை இணைப்புக்கு இது ஒரு வாழும் உதாரணமாகும்” என்றார். 

பிரதமர் நரேந்திர மோடி அடல் சுரங்கப்பாதையை திறந்து வைத்ததால் முழு நாட்டுக்கும் குறிப்பாக இமாசலப்பிரதேசத்தின் இது ஒரு வரலாற்று சிறப்புமிக்க நாள் என்று கூறிய ஜே.பி. நட்டா, 2014-ல் தொடங்கப்பட்ட இந்த திட்டத்தை விரைவாக நிறைவேற்றியதற்காகவும், மாநில மக்களின் பல ஆண்டுகால கோரிக்கையை நிறைவேற்றியதற்காகவும் அவர் மோடிக்கு நன்றி தெரிவித்தார். 
Tags:    

Similar News