செய்திகள்
நிரவ் மோடி

நிரவ் மோடி மோசடிக்கு உதவிய வங்கி அதிகாரி மீது குற்றப்பத்திரிகை: மும்பை கோர்ட்டில் சி.பி.ஐ. தாக்கல்

Published On 2020-10-03 01:38 GMT   |   Update On 2020-10-03 01:40 GMT
நிரவ் மோடிக்கு உதவிய பஞ்சாப் நேஷனல் வங்கிக்கிளையில் துணை மேலாளராக பணியாற்றிய கோகுல்நாத் ஷெட்டி மற்றும் இந்தியன் வங்கியில் குமாஸ்தாவாக பணியாற்றி வரும் அவருடைய மனைவி ஆஷா லதா மீதும் சி.பி.ஐ. தனியாக ஒரு வழக்கு பதிவு செய்துள்ளது.
மும்பை :

மும்பையில் பிராடி ஹவுசில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கிக்கிளையில் வைர வியாபாரி நிரவ் மோடி, அவருடைய உறவினர் மெகுல் சோக்சி ஆகியோர் ரூ.13 ஆயிரம் கோடி மோசடி செய்தனர். இந்த மோசடிக்கு உதவியவர் கோகுல்நாத் ஷெட்டி. இவர் அந்த காலகட்டத்தில், அந்த வங்கிக்கிளையில் துணை மேலாளராக பணியாற்றி வந்தார். தற்போது ஓய்வு பெற்று விட்டார்.

அவரும், இந்தியன் வங்கியில் குமாஸ்தாவாக பணியாற்றி வரும் அவருடைய மனைவி ஆஷா லதாவும் வருமானத்தை மீறி ரூ.2 கோடியே 63 லட்சம் சொத்து சேர்த்ததாக சி.பி.ஐ. தனியாக ஒரு வழக்கு பதிவு செய்துள்ளது. இவ்வழக்கில், கோகுல்நாத் ஷெட்டி மீதும், ஆஷா லதா மீதும் மும்பையில் உள்ள சி.பி.ஐ. கோர்ட்டில் சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
Tags:    

Similar News