செய்திகள்
கோப்புப்படம்

ரூ.409 கோடியில் இந்திய ராணுவத்துக்கு 10 லட்சம் கையெறி குண்டுகள்

Published On 2020-10-01 22:48 GMT   |   Update On 2020-10-01 22:48 GMT
மராட்டிய மாநிலம் நாக்பூரில் உள்ள எகனாமிக் எக்புளோசிவ் நிறுவனத்திடம் இருந்து இந்திய ராணுவத்துக்கு 10 லட்சம் கையெறி குண்டுகளை ரூ.409 கோடியில் வாங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி:

இந்திய ராணுவத்தில் இரண்டாம் உலகப்போரின்போது வடிவமைக்கப்பட்ட கையெறி குண்டுகள் பயன்பாட்டில் உள்ளன. இவற்றை மாற்றி பல பயன்பாடு கையெறி குண்டுகளை வாங்க மத்திய அரசு முடிவு செய்தது.

அதன் அடிப்படையில் மராட்டிய மாநிலம் நாக்பூரில் உள்ள எகனாமிக் எக்புளோசிவ் நிறுவனத்திடம் இருந்து 10 லட்சம் கையெறி குண்டுகளை ரூ.409 கோடியில் வாங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த கையெறி குண்டுகளை ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் டெர்மினல் பாலிஸ்டிக் ஆராய்ச்சி ஆய்வகம் வடிவமைத்து எகனாமிக் எக்புளோசிவ் நிறுவனம் தயாரிக்கிறது.

இந்த கையெறிகுண்டுகள் தனித்துவமான வடிவமைப்பை கொண்டுள்ளன. இவை தாக்குவதற்கும், தற்காப்பு முறைக்கும் பயன்படுத்தப்படலாம்.

மத்திய அரசின் சுய சார்பு திட்டத்தின் கீழ் தனியார், பொதுத்துறை கூட்டு முறையின் கீழ் இந்த கையெறி குண்டு கொள்முதல் அமைகிறது. இதற்கான ஒப்பந்தத்தில் எகனாமிக் எக்புளோசிவ் நிறுவனமும், ராணுவ அமைச்சகம் நேற்று கையெழுத்திட்டன.
Tags:    

Similar News