செய்திகள்
பிரதமர் மோடி

இமாசலில் உலகின் மிக நீளமான சுரங்கப்பாதை - அக்டோபர் 3-ல் பிரதமர் மோடி திறந்துவைக்கிறார்

Published On 2020-10-01 11:31 GMT   |   Update On 2020-10-01 11:31 GMT
இமாசல பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள உலகின் மிக நீளமான சுரங்கப் பாதையை அக்டோபர் 3-ம் தேதி பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்.
புதுடெல்லி:

இமாசல பிரதேச மாநில பிரதேசத்தில் மணாலியில் இருந்து லே நகருக்குச் செல்லும் நெடுஞ்சாலையில், கடல் மட்டத்தில் இருந்து 10 ஆயிரம் அடி உயரத்தில் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. 9 கிலோமீட்டர் நீளத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த சுரங்கம் உலகிலேயே, நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்டுள்ள மிக நீளமான சுரங்கம் ஆகும். 10 ஆண்டுகள் கடும் உழைப்பில் இந்த சுரங்கம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இதனால், மணாலியில் இருந்து லே செல்லும் தூரத்தில் 46 கி.மீ., குறைவதுடன் 4 மணி நேர பயண நேரம் சேமிக்கப்படும்.

‘அடல்’ என, பெயரிடப்பட்டுள்ள இந்த சுரங்கப்பாதையில், ஒவ்வொரு 60 மீட்டர் இடைவெளியில் தீயணைப்பு கருவிகள் வைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு 250 மீட்டர் இடைவெளியில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன. ஒவ்வொரு, 500 மீட்டர் தூரத்திலும், அவசர கால வெளியேறும் வழி அமைந்துள்ளது. இந்த சுரங்கப் பாதை திறப்பு விழாவிற்கு முழு தயார் நிலையில் உள்ளதாக எல்லை சாலை அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இமாசல பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள உலகின் மிக நீளமான சுரங்கப்பாதையை அக்டோபர் 3-ம் தேதி காலை 10 மணிக்கு பிரதமர் மோடி திறந்து வைக்கிறார் என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News