செய்திகள்
மாலத்தீவின் வெளியுறவுத்துறை மந்திரி அப்துல் சாஹித்

ரூ.1,850 கோடி நிதியுதவி - இந்தியாவுக்கு மாலத்தீவு நன்றி

Published On 2020-10-01 00:52 GMT   |   Update On 2020-10-01 00:52 GMT
மாலத்தீவுக்கு பொருளாதார நெருக்கடியை சமாளிக்க ரூ.1,850 கோடி நிதியுதவி அளித்ததற்கு வெளியுறவுத்துறை மந்திரி அப்துல் சாஹித் இந்தியாவுக்கு நன்றி தெரிவித்தார்.
புதுடெல்லி:

கொரோனா வைரஸ் வல்லரசு நாடுகளையே கபளீகரம் செய்த நிலையில், இந்த நோய் பேரிடர் காரணமாக ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை சமாளிக்க இந்தியாவிடம் அண்டை நாடான மாலத்தீவு நிதியுதவி கோரியது. அதை ஏற்று மத்திய அரசு மாலத்தீவிற்கு ரூ.1,850 கோடி (250 மில்லியன் டாலர்) நிதியுதவி வழங்கியது.

முன்னதாக ஏப்ரல், மே மாதங்களில் மருந்து மற்றும் உணவு பொருட்களையும் மாலத்தீவுக்கு இந்தியா வழங்கியது. இந்த நிலையில், நேற்று முன்தினம் நடந்த ஐக்கிய நாடுகள் சபையின் 75-வது அமர்வு பொது விவாதத்தில் மாலத்தீவின் வெளியுறவுத்துறை மந்திரி அப்துல் சாஹித் பங்கேற்று பேசினார்.

அப்போது, மாலத்தீவுக்கு பொருளாதார நெருக்கடியை சமாளிக்க ரூ.1,850 கோடி நிதியுதவி அளித்ததற்கு இந்தியாவுக்கு நன்றி தெரிவித்தார்.
Tags:    

Similar News