செய்திகள்
தேவேந்திர பட்னாவிஸ்

பீகார் சட்டசபை தேர்தல் - பாஜக பொறுப்பாளராக தேவேந்திர பட்னாவிஸ் நியமனம்

Published On 2020-09-30 11:38 GMT   |   Update On 2020-09-30 11:38 GMT
பீகார் சட்டசபை தேர்தலுக்கான பா.ஜ.க. பொறுப்பாளராக மகாராஷ்டிராவின் முன்னாள் முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.
பாட்னா:

பீகார் மாநிலத்தில் அக்டோபர் 28, நவம்பர் 3 மற்றும் நவம்பர் 7 ஆகிய நாட்களில் மூன்று கட்டங்களாக சட்டமன்றத் தேர்தல் நடத்தப்பட உள்ளது. 

முதல்கட்ட தேர்தலில் 16 மாவட்டங்களில் உள்ள 71 தொகுதிகளிலும், இரண்டாவது கட்டமாக 17 மாவட்டங்களில் உள்ள 94 தொகுதிகளிலும், மூன்றாவது கட்டமாக 15 மாவட்டங்களில் 78 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடைபெறும்.

மூன்று கட்ட தேர்தல்களிலும் பதிவான வாக்குகள் நவம்பர் 10-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். 

இந்நிலையில், பீகார் சட்டசபை தேர்தல் அறிவிப்பு குறித்து அம்மாநில பா.ஜனதா பொறுப்பாளர் பூபேந்தர் யாதவ் கூறியதாவது:

பீகார் சட்டசபை தேர்தலுக்கான பா.ஜ.க. பொறுப்பாளராக மகாராஷ்டிராவின் முன்னாள் முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.

பீகாரில் கடந்த பாராளுமன்ற தேர்தலில் பெற்ற வெற்றியை இந்த சட்டசபை தேர்தலிலும் பா.ஜ.க. கூட்டணி பெறும் என தெரிவித்தார்.
Tags:    

Similar News