செய்திகள்
சீதாராம் யெச்சூரி

நீதியின் கேலிக்கூத்து... பாபர் மசூதி இடிப்பு வழக்கின் தீர்ப்பு குறித்து சீதாராம் யெச்சூரி அதிருப்தி

Published On 2020-09-30 09:18 GMT   |   Update On 2020-09-30 09:18 GMT
பாபர் மசூதி இடிப்பு வழக்கில் சிபிஐ அளித்த தீர்ப்பு குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர் சீதாராம் யெச்சூரி அதிருப்தி தெரிவித்துள்ளார்.
லக்னோ:

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் 27 ஆண்டுகளுக்கு பிறகு லக்னோ சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பாஜக மூத்த தலைவர் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி உள்ளிட்ட 32 பேரும் விடுவிக்கப்பட்டனர். குற்றச்சாட்டுகளை போதிய ஆதாரங்களுடன் சிபிஐ நிரூபிக்காததால் அவர்கள் விடுவிக்கப்படுவதாக நீதிபதி சுரேந்திர குமார் யாதவ் தெரிவித்தார். 

இந்த தீர்ப்பு குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் சீதாராம் யெச்சூரி கூறுகையில், இது முற்றிலும் நீதியின் கேலிக்கூத்து என்றார். 

‘பாபர் மசூதியை இடிக்க கிரிமினல் சதி செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள். இது தானாக நடந்ததா? அப்போதைய தலைமை நீதிபதி தலைமையிலான அரசியலமைப்பு அமர்வு, பாபர் மசூதி இடிப்பு மிக மோசமான சட்ட மீறல் என்று கூறியிருந்தது. இப்போது இந்த தீர்ப்பு! அவமானம்’ என்றும் யெச்சூரி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
Tags:    

Similar News