செய்திகள்
கைது

டெல்லி அருகே கொரோனா பரிசோதனை கருவி போலி லேபிள்கள் தயாரிப்பு - கம்பெனி அதிபர் கைது

Published On 2020-09-30 00:27 GMT   |   Update On 2020-09-30 00:27 GMT
டெல்லி அருகே கொரோனா பரிசோதனை கருவி, ஆன்டிபாடி விரைவு சோதனை கருவிகளுக்கான போலி லேபிள்கள் சுமார் 4 லட்சம் அளவுக்கு கைப்பற்றப்பட்டன.
நொய்டா:

கொரோனா பரிசோதனை கருவிகள் தயாரிக்கும் ஒரு கம்பெனியின் பெயரில், டெல்லி அருகே நொய்டாவில் உள்ள ஒரு நிறுவனம் போலி லேபிள்கள் தயாரித்து புழக்கத்தில் விடுவது தெரியவந்தது. இதுதொடர்பாக, பாதிக்கப்பட்ட கம்பெனியின் பிரதிநிதி, அந்த நிறுவனம் மீது நொய்டா போலீசில் புகார் கொடுத்தார்.

அதன்பேரில், போலி லேபிள் தயாரித்த நிறுவனத்தில் நொய்டா போலீசார் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். அதில், ஆன்டிபாடி விரைவு சோதனை கருவிகளுக்கான போலி லேபிள்கள் சுமார் 4 லட்சம் அளவுக்கு கைப்பற்றப்பட்டன. அந்த நிறுவனத்தின் அதிபர் ராஜேஷ் பிரசாத் என்பவரை டெல்லியில் உள்ள அவரது வீட்டில், காப்புரிமை சட்டத்தின்கீழ் போலீசார் கைது செய்தனர்.
Tags:    

Similar News