செய்திகள்
டோர்னியர் விமானம்

மாலத்தீவுக்கு டோர்னியர் விமானம் வழங்கிய இந்தியா

Published On 2020-09-30 00:22 GMT   |   Update On 2020-09-30 00:22 GMT
கடல் சார்ந்த பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக மாலத்தீவுக்கு இந்தியா தற்போது டோர்னியர் விமானம் ஒன்றை வழங்கி உள்ளது.
புதுடெல்லி:

கடல் சார்ந்த பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக மாலத்தீவுக்கு டோர்னியர் விமானம் வழங்க வேண்டும் என கடந்த 2016-ம் ஆண்டு அப்போதைய மாலத்தீவு அதிபர் அப்துல்லா யாமீன் இந்தியாவிடம் வேண்டுகோள் விடுத்திருந்தார். அதன்படி மாலத்தீவுக்கு இந்தியா தற்போது டோர்னியர் விமானம் ஒன்றை வழங்கி உள்ளது.

மாலத்தீவின் பொருளாதார மண்டலத்தை கண்காணிக்கவும், கடல்வழி பயங்கரவாதிகள் ஊடுருவலை கண்காணிக்கவும் இந்த விமானம் உதவும். மேலும் போதைப்பொருள் கடத்தல், சட்ட விரோத மீன்பிடித்தலை தடுத்தல் போன்றவற்றுக்கும் இந்த விமானம் பயன்படுத்தப்படும்.

இந்த விமானம் மற்றும் அதை இயக்குவதற்கான செலவுகளை இந்தியாவே ஏற்கும். இந்த விமானத்தை மாலத்தீவு தேசிய பாதுகாப்பு படையினர் இயக்குவார்கள். இதற்காக மாலத்தீவு பாதுகாப்பு அதிகாரிகள் 7 பேருக்கு இந்தியா ஏற்கனவே பயிற்சி அளித்து இருந்தது.
Tags:    

Similar News