செய்திகள்
காங்கோ காய்ச்சல்

கொரோனாவை தொடர்ந்து காங்கோ காய்ச்சலா? மராட்டிய மாநிலத்தில் உஷார்

Published On 2020-09-29 23:42 GMT   |   Update On 2020-09-29 23:42 GMT
மராட்டிய மாநிலம், கொரோனா வைரஸ் பெருந்தொற்றால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் காங்கோ காய்ச்சல் பரவலுக்கு எதிராக உஷாராக இருக்குமாறு நிர்வாகம் அதிகாரிகளை கேட்டுக்கொண்டுள்ளது.
பால்கர்:

மராட்டிய மாநிலம், கொரோனா வைரஸ் பெருந்தொற்று நோயால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அங்குள்ள பால்கர் மாவட்டத்தில் காங்கோ காய்ச்சல் பரவலுக்கு எதிராக உஷாராக இருக்குமாறு உள்ளூர் அரசு நிர்வாகம் அதிகாரிகளை கேட்டுக்கொண்டுள்ளது.

காங்கோ காய்ச்சல் என அழைக்கப்படுகிற கிரிமியன் காங்கோ ரத்த கசிவு காய்ச்சல், மனிதர்களுக்கு உண்ணிகள் மூலம் பரவக்கூடியது.

குஜராத்தின் சில மாவட்டங்களில் இந்த தொற்றுநோய் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், அதையொட்டி மராட்டிய எல்லையில் அமைந்துள்ள மாவட்டங்களுக்கு பரவும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நோயை சரியான நேரத்தில் கண்டறிந்து சிகிச்சை அளிக்காவிட்டால், 40 சதவீத நோயாளிகள் இறக்க நேரிடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. பாதிக்கப்பட்ட நபருடன் மற்றவர்கள் நெருங்கிய தொடர்பில் இருந்தால் பரவும்.

இந்த நோய்க்கும் தடுப்பூசி கிடையாது.

Tags:    

Similar News