செய்திகள்
செம்மரக்கட்டைகள்

ஆந்திர வனப்பகுதியில் செம்மரம் வெட்ட சென்ற 80 பேரை பிடிக்க போலீசார் தீவிரம்

Published On 2020-09-29 09:28 GMT   |   Update On 2020-09-29 10:01 GMT
ஆந்திர வனப்பகுதியில் செம்மரம் வெட்ட சென்ற தமிழகத்தை சேர்ந்த 80 பேரை பிடிக்க போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
திருமலை:

ஆந்திர மாநிலம், கடப்பா மாவட்டம், ராஜம்பேட்டை வனச்சரகத்திற்குட்பட்ட ராலமடுகு, தீகலகொணா, சேஷாசல வனப்பகுதியில் வனத்துறையினர் ரோந்து சென்றனர்.

அப்போது வனப்பகுதியில் செம்மரங்களை வெட்டி கடத்த முயன்றவர்களை வனத்துறையினர் பிடிக்க முயன்றனர்.

இதில் 8 பேரை வனத்துறையினர் மடக்கி பிடித்தனர். அவர்களிடம் விசாரித்ததில் விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது.

இதையடுத்து அவர்களை வனத்துறையினர் கைது செய்தனர். அவர்களிடமிருந்து மேலும் சுமார் 10 டன் செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.2 கோடி இருக்கும் என வன அதிகாரிகள் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர்களில் 18 வயதுக்குட்பட்டவர்களும் உள்ளனர். மேலும் கைதானவர்களிடம் விசாரித்ததில் கடந்த 24-ந் தேதி வனப்பகுதியில் செம்மரம் வெட்ட தமிழகத்தை சேர்ந்த 80 பேர் சென்றதாக தெரிவித்துள்ளனர். அவர்களை பிடிக்கும் பணி நடந்து வருகிறது என்றார்.

Tags:    

Similar News