செய்திகள்
ஹர்ஷவர்தன்

கொரோனா தடுப்பூசி உருவாக்குவதை தெரிந்துகொள்ள தனி இணையதளம் - ஹர்ஷவர்தன்

Published On 2020-09-29 02:14 GMT   |   Update On 2020-09-29 02:14 GMT
கொரோனா தடுப்பூசி உருவாக்குவது பற்றிய தகவல்களை அறிந்துகொள்ள தனி இணையதளத்தை ஹர்ஷவர்தன் தொடங்கிவைத்தார்.
புதுடெல்லி:

கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி உருவாக்கும் பணி, இந்திய அளவிலும், உலக அளவிலும் நடந்து வருகிறது. இதுபற்றிய தகவல்களுக்காக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்.) பிரத்யேக இணையதளத்தை உருவாக்கி உள்ளது.

‘வேக்சின் வெப் போர்ட்டல்’ என்ற இந்த இணையதளத்தை மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஹர்ஷவர்தன் நேற்று தொடங்கிவைத்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

கொரோனா தடுப்பூசி உருவாக்குவது பற்றிய தகவல்களை உலகமே உன்னிப்பாக கவனித்து வருகிறது. எனவே, இதற்காக இந்த இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. விருப்பம் உள்ளவர்கள், இதை பயன்படுத்தி தகவல்களை தெரிந்து கொள்ளலாம்.

உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் தடுப்பூசிகளின் தற்போதைய நிலை, அவற்றின் பரிசோதனை நிலவரம், அதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்த அனைத்து தகவல்களையும் அறியலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஐ.சி.எம்.ஆரின் சாதனைகள் பற்றிய கண்காட்சியையும், நடமாடும் பக்கவாத சிகிச்சை பிரிவையும் ஹர்ஷவர்தன் தொடங்கிவைத்தார்.
Tags:    

Similar News