செய்திகள்
சரண் அடைந்த நபர்

என்னை சுட்டுவிடாதீர்கள்... பதாகை ஏந்தி வந்து போலீசில் சரண் அடைந்த குற்றவாளி

Published On 2020-09-28 09:29 GMT   |   Update On 2020-09-28 09:29 GMT
உத்தர பிரதேச மாநிலத்தில் 15 ஆயிரம் ரூபாய் சன்மானம் அறிவிக்கப்பட்டு போலீசாரால் தேடப்பட்ட குற்றவாளி ஒருவர் பதாகையுடன் வந்து சரண் அடைந்தார்.
சம்பால்:

உத்தர பிரதேச மாநிலத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் தேடப்படும் குற்றவாளிகளை பிடிக்க காவல்துறை முடுக்கி விடப்பட்டுள்ளது. சமூக விரோத செயல்கள் மற்றும் பொது அமைதியை சீர்குலைக்கும் செயல்களில் ஈடுபடும் பல்வேறு ரவுடிகள் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். 

இந்நிலையில், சம்பால் மாவட்டத்தில் குற்ற வழக்குகளில் தேடப்பட்டு வந்த நபர் ஒருவர், நேற்று நகாசா போலீஸ் நிலையத்திற்கு திடீரென வந்து சரண் அடைந்தார். அப்போது அவர் தனது கழுத்தில் பதாகை ஒன்றை கட்டியிருந்தார். அதில், ‘நான் குற்றவாளி, சரண் அடைகிறேன், என்னை சுட்டுவிடாதீர்கள்’ என எழுதப்பட்டிருந்தது. 

அவர், அதிகாரிகள் முன்பு மண்டியிட்டு சரண் அடைந்தபோது எடுத்த வீடியோ சமூக வலைத்தங்களில் வேகமாக பரவி வருகிறது.

போலீசார் என்கவுண்டரில் கொன்றுவிடுவார்கள் என்ற பயத்தில் அந்த குற்றவாளி சரண் அடைந்துள்ளார். அவரை பிடித்துக் கொடுத்தால் 15000 ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

சரண் அடைந்த நபர் தற்போது போலீஸ் கஸ்டடியில் வைக்கப்பட்டுள்ளார். உரிய சட்ட நடைமுறைக்குப் பிறகு அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.
Tags:    

Similar News