செய்திகள்
மந்திரி கடகம்பள்ளி சுரேந்திரன்

அக்டோபர் 15-ந் தேதிக்கு பிறகு சுற்றுலா தலங்கள் திறப்பு- மந்திரி கடகம்பள்ளி சுரேந்திரன் அறிவிப்பு

Published On 2020-09-28 07:19 GMT   |   Update On 2020-09-28 07:21 GMT
கேரளாவில் அக்டோபர் 15-ந் தேதிக்கு பிறகு சுற்றுலா தலங்கள் திறக்கப்பட உள்ளதாக சுற்றுலா துறை மந்திரி கடகம்பள்ளி சுரேந்திரன் அறிவித்து உள்ளார்.

திருவனந்தபுரம்:

கேரளாவில் கொரோனா ஊரடங்கு காரணமாக சுற்றுலா தலங்கள் அனைத்தும் மூடப்பட்டன. மத்திய அரசின் படிப்படியான தளர்வுகள் வழிகாட்டுதல்படி கேரளாவில் தனியார் ஓட்டல்களும், ரிசார்டுகளும் திறக்கப்பட்டு உள்ளன.

இந்த நிலையில் சுற்றுலா தலங்களும் திறக்கப்பட உள்ளதாக கேரள சுற்றுலா துறை மந்திரி கடகம் பள்ளி சுரேந்திரன் அறிவித்து உள்ளார். அவர் கூறியதாவது:-

கேரளாவில் அக்டோபர் 15-ந் தேதிக்கு பிறகு சுற்றுலா தலங்கள் மீண்டும் திறக்கப்பட உள்ளது. முதலில் உள்நாட்டு சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் விதத்தில் பிரசாரங்கள் நடத்தப்படும், என்றார்.

Tags:    

Similar News