செய்திகள்
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, எஸ்.பி.பாலசுப்பிரமணியம்

இனிய குரலை இழந்துவிட்டது இந்திய இசை... எஸ்பிபி மறைவுக்கு ஜனாதிபதி, பிரதமர் இரங்கல்

Published On 2020-09-25 10:27 GMT   |   Update On 2020-09-25 10:27 GMT
பின்னணி பாடகர் எஸ்பிபி மறைவால் இசை உலகமும், கலாச்சார உலகமும் ஏழையாகிவிட்டது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:

உடல்நலம் பாதிக்கப்பட்டு சென்னையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் இன்று காலமானார். அவரது மறைவு திரையுலகினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அவரது மறைவுக்கு திரையுலகினர், அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ‘எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மறைவால் இந்திய இசை அதன் மிகவும் இனிய குரல்களில் ஒன்றை இழந்திருக்கிறது. ரசிகர்களால் ‘பாடும் நிலா’ என்று அழைக்கப்பட்ட எஸ்.பி.பி.க்கு பத்ம பூஷண் மற்றும் பல தேசிய விருதுகள் வழங்கப்பட்டன. அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், அபிமானிகளுக்கும் இரங்கல் தெரிவிக்கிறேன்’ என கூறி உள்ளார்.

பிரதமர் மோடி டுவிட்டரில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி வருமாறு:

எஸ்.பி.பாலசுப்பிரணியம் மறைவால் இசை உலகமும், கலாச்சார உலகமும் ஏழையாகிவிட்டது. பல ஆண்டுகளாக எல்லா வீடுகளிலும் ஒலித்துவந்த அவரது குரல் அடங்கிவிட்டது. துயரமான இந்த நேரத்தில் அவரது குடும்பத்தினருக்கும், ரசிகர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்கள்.

இவ்வாறு பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.
Tags:    

Similar News