செய்திகள்
ஆன்லைன் பயன்பாடு

பீகார் சட்டமன்ற தேர்தல்- வேட்பாளர்கள் ஆன்லைன் மூலம் வேட்பு மனு தாக்கல் செய்யலாம்

Published On 2020-09-25 09:29 GMT   |   Update On 2020-09-25 09:29 GMT
பீகார் தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்ய வரும் வேட்பாளருடன் இரண்டு நபர்கள் மட்டுமே வர அனுமதி அளிக்கப்படும் என தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:

இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா இன்று டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கொரோனா பெருந்தொற்றுக்கு மத்தியில் மிகப்பெரிய தேர்தல் பீகார் மாநிலத்தில் நடத்தப்பட உள்ளது. பீகார் மாநிலத்தில் 3 கட்டங்களாக சட்டமன்றத் தேர்தல் நடத்தப்படுகிறது. அக்டோபர் 28, நவம்பர் 3 மற்றும் 7 ஆகிய நாட்களில் வாக்குப்பதிவு நடத்தப்படும். 

முதற்கட்ட தேர்தலில் 16 மாவட்டங்களில் உள்ள 71 தொகுதிகளிலும், இரண்டாவது கட்டமாக 17 மாவட்டங்களில் 94 தொகுதிகளிலும், 15 மாவட்டங்களில் 78 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடைபெறும். 3 கட்ட தேர்தல்களிலும் பதிவான வாக்குகள் நவம்பர் 10ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். 

வேட்பாளர்கள் ஆன்லைன் மூலமாக வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய முடியும். சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரிகளிடம் நேரடியாகவும் வழங்கலாம். ஆன்லைன் மூலம் மனு தாக்கல் செய்வோர், ஆன்லைன் வாயிலாகவே டெபாசிட் தொகையை செலுத்த முடியும். 

வேட்புமனு தாக்கல் செய்ய வரும் வேட்பாளருடன் இரண்டு நபர்கள்  மட்டுமே வர அனுமதி அளிக்கப்படும். பிரச்சாரம், வீடு வீடாக வாக்குசேகரிப்புக்கு மூன்று நபர்களுக்கு மட்டுமே அனுமதி. பிரச்சார வாகன அணிவகுப்பில் 5 கார்கள் மட்டுமே செல்லலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News