செய்திகள்
வைரல் புகைப்படம்

விவசாயிகள் போராட்டத்தில் எடுக்கப்பட்டதாக வைரலாகும் புகைப்படம்

Published On 2020-09-25 04:53 GMT   |   Update On 2020-09-25 04:53 GMT
விவசாயிகள் பாதுகாப்பு மசோதாவுக்கு எதிரான போராட்டத்தில் எடுக்கப்பட்டதாக கூறி புகைப்படம் வைரலாகி வருகிறது.


போலீஸ் அதிகாரியை செங்கல்லால் தாக்க முயலும் வயதானவர் துப்பாக்கி முனையில் நிற்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படம் சமீபத்திய விவசாயிகள் பாதுகாப்பு மசோதாவுக்கு எதிரான போராட்டத்தின் போது எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

செப்டம்பர் 21 ஆம் தேதி பாராளுமன்றத்தில் விவசாயிகள் பாதுகாப்பு மசோதா நிறைவேறியது. இந்த மசோதாவுக்கு எதிராக விவசாயிகள், விவசாய சங்கங்கள் சார்பில் ஹரியானா மற்றும் பஞ்சாப் போன்ற பகுதிகளில் போராட்டங்களில் நடத்தப்பட்டன.



இந்நிலையில், வைரல் புகைப்படத்தை காங்கிரஸ் கட்சியினர் அதிகளவில் பகிர்ந்து வருகின்றனர். வைரல் புகைப்படம், மோடிக்கு எதிராக குரல் கொடுத்த அனைவரும் தாக்கப்பட்டுள்ளனர் எனும் தலைப்பில் பகிரப்பட்டு வருகிறது.

வைரல் புகைப்படத்தை இணையத்தில் தேடிய போது, அது 2013 ஆம் ஆண்டு எடுக்கப்பட்டது என தெரியவந்துள்ளது. உண்மையில் இது செப்டம்பர் 30, 2013 ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஆகும். இது உத்திர பிரதேச மாநிலத்தில் போலீசார் மற்றும் கிராமவாசிகளுக்கு இடையில் ஏற்பட்ட மோதலின் போது எடுக்கப்பட்டது ஆகும்.

அந்த வகையில், இந்த புகைப்படம் சமீபத்திய விவசாயிகள் போராட்டத்தின் போது எடுக்கப்படவில்லை என்பது உறுதியாகிவிட்டது. 

போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமயங்களில் போலி செய்தி பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு இருக்கின்றன.
Tags:    

Similar News