செய்திகள்
சுப்ரீம் கோர்ட்

12-ம் வகுப்பு மறுதேர்வு முடிவு அக்டோபர் 10-ந்தேதிக்குள் வெளியிடப்படும் - சுப்ரீம் கோர்ட்டில் சி.பி.எஸ்.இ. தகவல்

Published On 2020-09-25 02:29 GMT   |   Update On 2020-09-25 02:29 GMT
12-ம் வகுப்பு மறுதேர்வு முடிவு அக்டோபர் 10-ந் தேதிக்கு முன்னர் வெளியிடப்படும் என்று சி.பி.எஸ்.இ. தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டது.
புதுடெல்லி:

கொரோனா பரவலாக உள்ள சூழ்நிலையில் இந்த ஆண்டு மறுதேர்வு எழுதும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த கல்வியாண்டு பாதிக்காத வகையில் பல்கலைக்கழகங்களில் இளங்கலை படிப்புக்கான மாணவர் சேர்க்கையை நடத்த உத்தரவிட வேண்டும் என்று அனிகா சம்வேதி என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டும், கொரோனா நோய்த்தொற்று பிரச்சினையை கருத்தில் கொண்டும் சி.பி.எஸ்.இ. மற்றும் பல்கலைக்கழக மானியக்குழு மறுதேர்வு முடிவுகளை வெளியிடுதல் மற்றும் மாணவர் சேர்க்கை தொடர்பாக இணைந்து முடிவு எடுக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்தனர்.

இந்நிலையில் இந்த மனு நேற்று நீதிபதிகள் ஏ.எம்.கன்வில்கர், சஞ்சீவ் கன்னா அடங்கிய காணொலி அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது 12-ம் வகுப்பு மறுதேர்வு முடிவு அக்டோபர் 10-ந் தேதிக்கு முன்னர் வெளியிடப்படும் என்று சி.பி.எஸ்.இ. தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அதேபோல சுமார் 2 லட்சம் மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு பல்கலைக்கழகங்களில் இளங்கலை படிப்புக்கான மாணவர் சேர்க்கை அக்டோபர் 31-ந் தேதியில் இருந்து தொடங்கும் என்று பல்கலைக்கழக மானியக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
Tags:    

Similar News