செய்திகள்
மந்திரி சி.டி.ரவி

கொரோனாவை அலட்சியமாக எடுத்துக்கொள்ள முடியாது: மந்திரி சி.டி.ரவி பேட்டி

Published On 2020-09-25 02:20 GMT   |   Update On 2020-09-25 02:20 GMT
கொரோனாவை நாம் அலட்சியமாக எடுத்துக்கொள்ள முடியாது. கொரோனா விஷயத்தில் அரசை விட தனிப்பட்டவர்களுக்கு அதிக பொறுப்புணர்வு தேவை என்று கர்நாடக சுற்றுலாத்துறை மந்திரி சி.டி.ரவி கூறியுள்ளார்.
பெங்களூரு :

கர்நாடக சுற்றுலாத்துறை மந்திரி சி.டி.ரவி பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

கொரோனா நமது கற்பனைக்கு மீறிய வைரசாக உள்ளது. இதுகுறித்து தீவிரமாக ஆலோசிக்க வேண்டிய நேரம் வந்துள்ளது. நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருந்த மத்திய மந்திரி சுரேஷ் அங்கடி கொரோனாவுக்கு பலியாகி இருப்பது, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 90 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களும் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர்.

அதே நேரத்தில் 30 வயதாகும் இளைஞர்களும் கொரோனாவுக்கு பலியாகிறார்கள். கொரோனாவை நாம் அலட்சியமாக எடுத்துக்கொள்ள முடியாது. திடீரென மரணங்கள் நிகழ்கின்றன. அதனால் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அனைத்து விதிமுறைகளையும் அனைவரும் தவறாமல் பின்பற்ற வேண்டியது அவசியம்.

ஆனால் சிலர் இது அரசின் கடமை என்று நினைக்கிறார்கள். கொரோனா விஷயத்தில் அரசை விட தனிப்பட்டவர்களுக்கு அதிக பொறுப்புணர்வு தேவை. காங்கிரஸ் கட்சி மக்களின் நம்பிக்கையை இழந்துவிட்டது. அதனால் அரசு கொண்டு வரும் சட்ட திருத்த மசோதாக்களை எதிர்க்கிறார்கள். எங்களுக்கு பெரும்பான்மை பலம் இருப்பதால், மசோதாக்களை நிறைவேற்றுவோம்.

இவ்வாறு சி.டி.ரவி கூறினார்.

Tags:    

Similar News