செய்திகள்
கோப்புப்படம்

காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் துணை ராணுவ அதிகாரி பலி

Published On 2020-09-24 22:19 GMT   |   Update On 2020-09-24 22:19 GMT
காஷ்மீரில் பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டதில் சி.ஆர்.பி.எப். சப்-இன்ஸ்பெக்டர் படோலே சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
ஸ்ரீநகர்:

காஷ்மீரின் புத்காம் மாவட்டம் கைசர்முல்லா என்ற இடத்தில் துணை ராணுவப்படையான மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் (சி.ஆர்.பி.எப்.) ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டதில் சி.ஆர்.பி.எப். சப்-இன்ஸ்பெக்டர் படோலே என்பவர் படுகாயம் அடைந்தார். உடனே அவரை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

இதற்கிடையே புல்வாமா மாவட்டத்தின் அவந்திபுரா பகுதியில் உள்ள மச்ஹமா என்ற இடத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. உடனே சம்பவ இடத்திற்கு நேற்று காலை விரைந்து சென்ற கூட்டுப்படையினர், பயங்கரவாதிகளை சரண் அடையுமாறு எச்சரித்தனர். ஆனால் பாதுகாப்பு படையினர் மீது துப்பாக்கி சூடு நடத்தியதால், பதில் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் ஒரு பயங்கரவாதி கொல்லப்பட்டார். சம்பவ இடத்தில் இருந்த துப்பாக்கி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன.
Tags:    

Similar News