செய்திகள்
பிரபல அணு விஞ்ஞானி சேகர் பாசு

பிரபல அணு விஞ்ஞானி கொரோனாவுக்கு பலி

Published On 2020-09-24 19:49 GMT   |   Update On 2020-09-24 19:49 GMT
பிரபல அணு விஞ்ஞானி சேகர் பாசு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பால் மரணம் அடைந்தார்.
கொல்கத்தா:

பிரபல அணு விஞ்ஞானி சேகர் பாசு (வயது 68). இவர் அணுசக்தி ஆணையத்தின் தலைவராக இருந்தவர்.கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பால் கொல்கத்தாவில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டிருந்தார்.

இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இவர் நேற்று காலை 4.50 மணிக்கு மரணம் அடைந்தார். இவருக்கு சிறுநீரக நோயும் தாக்கி இருந்ததாக தகவல்கள் கூறுகின்றன. 2014-ம் ஆண்டு பத்மஸ்ரீ விருது பெற்ற இவர் நாட்டின் அணுசக்தி திட்டங்களுக்கு தனது பங்களிப்பை செய்துள்ளார். இந்தியாவின் முதல் அணுசக்தி நீர்மூழ்கி கப்பல் ஐ.என்.எஸ். அரிஹந்துக்கான சிக்கலான அணு உலையை அமைப்பதில் முன்னோடியாக திகழ்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News