செய்திகள்
குமாரசாமி

கொரோனா குறித்து விவாதித்து காங்கிரசார் என்ன சாதித்தனர்?: குமாரசாமி கேள்வி

Published On 2020-09-24 02:25 GMT   |   Update On 2020-09-24 02:25 GMT
காங்கிரசார் கொரோனா குறித்து விவாதித்து என்ன சாதித்தனர்?. அதனால் அவர்களுக்கு பெரிய அளவில் விளம்பரம் கிடைத்தது என்று குமாரசாமி கூறியுள்ளார்.
பெங்களூரு :

கர்நாடக சட்டசபை மழைக்கால கூட்டத்தொடர் பெங்களூருவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. வருகிற 26-ந் தேதி கூட்டத்தொடர் நிறைவடைகிறது. இந்த நிலையில் ஜனதா தளம்(எஸ்) எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் அதன் தலைவர் குமாரசாமி தலைமையில் பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. இதில் அக்கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டம் நிறைவடைந்த பிறகு குமாரசாமி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

கர்நாடக சட்டசபையில் எங்கள் கட்சியின் நிலைப்பாடு என்னவாக இருக்க வேண்டும் என்பது குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசனை நடத்தினோம். சட்டசபை கூட்டம் இன்னும் 3 நாட்கள் தான் உள்ளது. இதில் மக்கள் விரோத சட்ட மசோதாக்களை நாங்கள் எதிர்ப்போம். எந்தவித விவாதமும் இல்லாமல் மசோதாக்களை அரசு நிறைவேற்றுகிறது. அதேபோல் மத்திய அரசும் முக்கிய மசோதாக்களை விவாதம் நடத்தாமல் நிறைவேற்றுகிறது.

காங்கிரசார் கொரோனா குறித்து விவாதித்து என்ன சாதித்தனர்?. அதனால் அவர்களுக்கு பெரிய அளவில் விளம்பரம் கிடைத்தது. நேற்றைய (நேற்று முன்தினம்) கூட்டத்தில் நான் கலந்து கொள்ளாமல் இருந்ததே நல்லது. முதல்-மந்திரி எடியூரப்பா, பல்வேறு துறை தொழிலாளர்களுக்கு நிதி உதவி தொகுப்பு திட்டத்தை அறிவித்தார். அது எத்தனை பேருக்கு கிடைத்தது? கர்நாடக சட்டசபையில் வேளாண்மை சந்தைகள் சட்ட திருத்த மசோதா மீதான விவாதத்தில் நான் கலந்து கொள்வேன்.

கொரோனா நெருக்கடி ஏற்பட்டுள்ள இந்த நேரத்தில் இந்த மசோதாவை நிறைவேற்றுவது சரியா? இன்னும் 6 மாதங்கள் ஒத்திபோட்டால் என்ன ஆகிவிடும்? இதுகுறித்து நான் சட்டசபையில் விரிவாக பேச உள்ளேன்.

இவ்வாறு குமாரசாமி கூறினார்.
Tags:    

Similar News