செய்திகள்
மகிந்த ராஜபக்சே, பிரதமர் மோடி

காணொலி காட்சி மூலம் பிரதமர் மோடி - மகிந்த ராஜபக்சே 26-ந்தேதி பேச்சுவார்த்தை

Published On 2020-09-23 18:50 GMT   |   Update On 2020-09-23 18:50 GMT
பிரதமர் மோடி-இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே இடையிலான இருதரப்பு உச்சி மாநாடு காணொலி காட்சி மூலமாக வருகிற 26-ந்தேதி நடைபெற உள்ளது.
புதுடெல்லி:

பிரதமர் மோடி-இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே இடையிலான இருதரப்பு உச்சி மாநாடு, வருகிற 26-ந்தேதி நடக்கிறது.

கொரோனா காலமாக இருப்பதால், காணொலி காட்சி மூலம் இம்மாநாடு நடக்கிறது. அப்போது, இருதரப்பு உறவுகளை இருவரும் விரிவாக ஆய்வு செய்வார்கள் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இலங்கையில், இந்தியா ஏராளமான உள்கட்டமைப்பு திட்டங்களை மேற்கொண்டு வருகிறது. அவற்றின் முன்னேற்றம் குறித்தும் ஆலோசிக்கப்படும் என்று தெரிகிறது.கடந்த பிப்ரவரி மாதம், பிரதமர் மோடியை டெல்லியில் மகிந்த ராஜபக்சே சந்தித்து பேசினார். அதன்பிறகு அவர்கள் 2 தடவை தொலைபேசியில் பேசிக்கொண்டனர். இருப்பினும், அந்த சந்திப்புக்கு பிறகு, இதுதான் அவர்களுக்கிடையிலான முதலாவது அதிகாரபூர்வ பேச்சுவார்த்தை ஆகும்.
Tags:    

Similar News