செய்திகள்
அதிமுக எம்பி பாலசுப்பிரமணியன்

வெளிநாட்டு நிதி முறைப்படுத்தும் சட்டத்தை தவறாக பயன்படுத்த வாய்ப்பு உள்ளது- அதிமுக எம்பி பேச்சு

Published On 2020-09-23 07:22 GMT   |   Update On 2020-09-23 07:22 GMT
வெளிநாட்டு நிதியை முறைப்படுத்தும் எப்சிஆர்ஏ மசோதாவில், அரசின் எண்ணம் நல்ல உள்நோக்கம் கொண்டதாக இருந்தாலும் நடைமுறையில் தவறாக பயன்படுத்தப்பட வாய்ப்பு உள்ளது என்று அதிமுக எம்பி தெரிவித்தார்.
புதுடெல்லி:

அரசு சாரா தொண்டு நிறுவனங்களின் செயல்பாடுகளை கண்காணித்து ஒழுங்குபடுத்தும், வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டத்திருத்த மசோதா (எப்சிஆர்ஏ) மக்களவையில் கடந்த 21ம் தேதி நிறைவேற்றப்பட்ட நிலையில், மாநிலங்களவையில் இன்று நிறைவேற்றப்பட்டது. 

முன்னதாக இந்த மசோதா மீதான விவாதத்தில் பங்கேற்று பேசிய அதிமுக எம்பி எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன், வெளிநாட்டு நிதியை முறைப்படுத்தும் இந்த மசோதாவில் அரசின் எண்ணம் நல்ல உள்நோக்கம் கொண்டதாக இருந்தாலும் நடைமுறையில் தவறாக பயன்படுத்தப்பட வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்தார்.

தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் நிர்வாக செலவை குறைக்கும் முடிவு என்பது தேவையற்றது என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்த சட்டத் திருத்தத்தின்படி, அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் மொத்த வெளிநாட்டு நிதியில் 20 சதவீதத்திற்கு மேல் நிர்வாக செலவீனங்களுக்காக பயன்படுத்தக் முடியாது, அடையாளச் சான்றிதழாக ஆதார் எண் கட்டாயம் அளிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News