செய்திகள்
மீட்பு பணியில் வீரர்கள்

மகாராஷ்டிரா கட்டிட விபத்து - பலியானோர் எண்ணிக்கை 20 ஆக அதிகரிப்பு

Published On 2020-09-22 03:47 GMT   |   Update On 2020-09-22 09:23 GMT
மும்பையை அடுத்த பிவண்டியில் கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 20 ஆக அதிகரித்துள்ளது.
மும்பை:

மகாராஷ்டிரா மாநில தலைநகர் மும்பையை அடுத்த பிவண்டியில் ஜிலானி என்ற 3 மாடி கட்டிடத்தில் உள்ள 40 வீடுகளில் சுமார் 150 பேர் வசித்து வந்தனர்.

நேற்று அதிகாலை 3.30 மணி அளவில் அனைவரும் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தபோது, கட்டிடத்தின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்தது. அதிர்வை உணர்ந்து கண் விழிக்கும் முன்பே பலர் இடிபாடுகளுக்குள் புதைந்தனர்.

கட்டிடம் இடிந்த சத்தம்கேட்டு எழுந்து வந்த அப்பகுதி மக்கள், கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்க முயற்சி மேற்கொண்டனர். மேலும் தகவல் அறிந்த தீயணைப்பு படையினர், போலீசார் மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படையினர் ஆகியோர் விரைந்து அப்பகுதிக்கு வந்தனர்.

இதனை தொடர்ந்து மீட்புப்படையினர், இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்த 7 சிறுவர்-சிறுமிகள் உள்பட 13 பேரின் உடல்களை மீட்டனர்.

இதேபோல இடிபாடுகளில் இருந்து 4 வயது சிறுவன், 7 வயது சிறுமி உள்பட 20 பேரை மீட்பு படையினர் உயிருடன் மீட்டனர். அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்நிலையில், இன்று காலை மேலும் 4 பேரின் உயிரற்ற உடல்களை மீட்புப் படையினர் இடிபாடுகளில் இருந்து மீட்டனர். இதையடுத்து கட்டிட விபத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 20 ஆக அதிகரித்துள்ளது என தானே மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News