செய்திகள்
மேற்கு வங்காள மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜி

8 எம்.பி.க்கள் இடைநீக்கம் - மம்தா பானர்ஜி கண்டனம்

Published On 2020-09-21 19:39 GMT   |   Update On 2020-09-21 19:39 GMT
பாராளுமன்ற மாநிலங்களவையில் அமளியில் ஈடுபட்டதாக எதிர்கட்சி எம்.பி.க்கள் 8 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டு இருப்பதற்கு மம்தா பானர்ஜி கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.
புதுடெல்லி:

பாராளுமன்ற மாநிலங்களவையில் அமளியில் ஈடுபட்டதாக எதிர்கட்சி எம்.பி.க்கள் 8 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டு இருப்பதற்கு திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்காள முதல்-மந்திரியுமான மம்தா பானர்ஜி கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “விவசாயிகளின் நலனை பாதுகாக்க போராடிய 8 எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டு இருப்பது மிகவும் துரதிருஷ்டவசமானது. ஜனநாயக நெறிமுறைகளை மதிக்காமல் மத்திய அரசு சர்வாதிகார போக்குடன் நடந்து கொள்வதையே இது காட்டுகிறது. அச்சுறுத்தலுக்கு பணிந்து விடாமல் பாராளுமன்றத்திலும், வெளியேயும் மத்திய அரசுக்கு எதிராக நாங்கள் போராடுவோம்” என்று கூறி உள்ளார்.
Tags:    

Similar News