செய்திகள்
விஜயவாடாவில் வகுப்பறையில் அமர்ந்திருந்த மாணவிகள்

ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் 6 மாதங்களுக்கு பிறகு பள்ளிகள் திறப்பு

Published On 2020-09-21 08:52 GMT   |   Update On 2020-09-21 08:52 GMT
ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ள நிலையில், மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பல்வேறு மாநிலங்களில் பள்ளிகள் இன்று திறக்கப்பட்டன.
புதுடெல்லி:

கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கில் படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அவ்வகையில், செப்டம்பர் 21 (இன்று) முதல் விருப்பத்தின் பேரில் 9 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்கள் பள்ளிகளுக்கு செல்லலாம் என மத்திய அரசு அறிவித்தது. 

அதன்படி ஆறு மாத இடைவெளிக்குப் பிறகு, ஆந்திரா, கர்நாடகா, அசாம், மிசோரம், நாகலாந்து, மேகாலயா, ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், அரியானா, இமாச்சல பிரதேசம் உள்ளிட்ட நாட்டின் பல்வேறு மாநிலங்களில் பள்ளிகள் இன்று திறக்கப்பட்டுள்ளன. விருப்பத்தின் பேரில் வரும் மாணவர்களுக்கு வகுப்புகள் நடைபெறுகிறது.

கர்நாடகாவில் வழக்கம்போல் வகுப்புகள் செயல்படாது எனவும், பள்ளிகளில் ஆசிரியர்கள் மாணவர்களின் சந்தேகங்களை போக்குவதற்காக இருப்பார்கள் என கூறப்பட்டுள்ளது. 

மத்திய அரசின் வழிகாட்டுதல்களை பின்பற்றி ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. இதுபற்றி ஒரு பள்ளியின் தலைமை ஆசிரியை கூறுகையில், ‘கல்வி ஆணையரின் உத்தரவுப்படி இன்று முதல் எங்கள் பள்ளியைத் திறக்கிறோம். அனைத்து ஆசிரியர்களும் வருவார்கள். 9 மற்றும் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டுமே பள்ளிக்கு வர அனுமதி உண்டு. அனைத்து நிலையான வழிகாட்டு நெறிமுறைகளும் பின்பற்றப்படுகின்றன’ என்றார்.
Tags:    

Similar News