செய்திகள்
சித்தராமையா

சந்தர்ப்பவாத கட்சி என விமர்சனம்: சித்தராமையாவுக்கு மதசார்பற்ற ஜனதா தளம் தலைவர்கள் கண்டனம்

Published On 2020-09-21 02:13 GMT   |   Update On 2020-09-21 02:13 GMT
சந்தர்ப்பவாத கட்சி என விமர்சித்த சித்தராமையாவுக்கு ஜனதா தளம்(எஸ்) தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
பெங்களூரு :

காநாடக முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா, ஜனதா தளம்(எஸ்) கட்சி ஒரு சந்தர்ப்பவாத கட்சி என்று குறை கூறியுள்ளார். இதற்கு குமாரசாமி கண்டனம் தெரிவித்து கடுமையாக தாக்கி கருத்து தெரிவித்துள்ளார். மேலும் அக்கட்சியை சேர்ந்த தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஜனதா தளம்(எஸ்) கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மந்திரியுமான பசவராஜ் ஹொரட்டி தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

சித்தராமையாவுக்கு காங்கிரசில் உயர்ந்த பதவி கிடைக்க ஜனதா தளம்(எஸ்) கட்சியில் அவருக்கு வழங்கப்பட்ட அதிகாரம் மற்றும் பதவிகளே காரணம். இல்லாவிட்டால் காங்கிரசில் அவருக்கு எந்த மரியாதையும் இருந்திருக்காது. ஜனதா தளம்(எஸ்) கட்சிக்கு எதிராக பேசுவதற்கு முன்பு அவர் தான் எங்கு அரசியல் செய்தோம் என்பதை நினைத்து பார்க்க வேண்டும். ஜனதா தளம்(எஸ்) கட்சியை குறைத்து மதிப்பிடுவது சரியல்ல.

இவ்வாறு பசவராஜ் ஹொரட்டி கூறியுள்ளார்.

முன்னாள் மந்திரி சா.ரா.மகேஷ் தனது டுவிட்டரில், “சுயநல அரசியலின் இன்னொரு பெயரே சித்தராமையா. காங்கிரசில் சன்னியாசி போல் இருக்கும் அவருக்கு, எங்கள் கட்சி பற்றி விமர்சிக்க தகுதி இல்லை. தன்னை வளர்த்து ஆளாக்கிய கட்சிக்கு துரோகம் செய்துவிட்டு, ஏறிய ஏணியை எட்டி உதைக்கும் பழக்கம் கொண்ட சித்தராமையா சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும்“ என்று குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் மந்திரி சி.எஸ். புட்டராஜூவும் சித்தராமையாவுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News