செய்திகள்
மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஹர்ஷ்வர்தன்

பிஎம் கேர்ஸ் நிதியில் இருந்து ரூ.893 கோடி பெற்று 50 ஆயிரம் வெண்டிலேட்டர்கள் தயாரித்துள்ளோம் - சுகாதாரத்துறை மந்திரி தகவல்

Published On 2020-09-20 17:10 GMT   |   Update On 2020-09-20 17:10 GMT
பிஎம் கேர்ஸ் நிதியில் இருந்து ரூ.893.93 கோடி பெற்றுள்ளதாகவும், அதன் மூலம் உள்நாட்டிலேயே 50 ஆயிரம் வெண்டிலேட்டர்களை தயாரித்துள்ளதாகவும் சுகாதாரத்துறை மந்திரி ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:

கொரோனா வைரசை கட்டுப்படுத்துவது தொடர்பாக பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டுவருகிறது. இந்த நடவடிக்கைகளுக்காக மத்திய அரசுக்கு பல்வேறு வழிகளில் 
நன்கொடை வந்துள்ளது. 

இந்த நன்கொடையை கையாழுவதற்காக பிஎம் கேர்ஸ் என்ற நிதியத்தை உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நிதியில் இருந்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்திற்கு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக நிதி வழங்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையில், கொரோனா வைரஸ் தொடர்பாக தற்போது மக்களவையில் விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த விவாதத்தின்போது காங்கிரஸ் கட்சியின் மக்களவை தலைவர் ஆதிர் சௌதிரி மத்திய சுகாதாரத்துறை மந்திரியிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பினார். 

அதில் கொரோனாவை கட்டுப்படுத்தும் நடவடிக்கைக்காக உருவாக்கப்பட்ட பிஎம் கேர்ஸ் நிதியில் இருந்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் எவ்வளவு நிதி பெற்றுள்ளது? என கேள்வி கேட்டார்.

காங்கிரஸ் உறுப்பினரின் கேள்விக்கு மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஹர்ஷ்வர்தன் பதிலளித்துள்ளார். 

இது குறித்து மந்திரி ஹர்ஷ்வர்தன் கூறுகையில்,’ பிஎம் கேர்ஸ் நிதியில் இருந்து எனது அமைச்சகமான மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் 893.93 கோடி ரூபாய் பெற்றுள்ளது. அந்த நிதி மூலம் 50 ஆயிரம் வெண்டிலேட்டர்கள் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த வெண்டிலேட்டர்கள் அனைத்தும் மேட் இன் இந்தியா எனப்படும் உள்நாட்டு தயாரிப்பு ஆகும்’ என்றார். 
Tags:    

Similar News