செய்திகள்
மகிந்திரா நிறுவனம் வழங்கிய டிராக்டரில் முதியவர்

கிராமத்திற்காக தனி ஆளாக கால்வாய் வெட்டிய முதியவருக்கு கிடைத்த பரிசு

Published On 2020-09-20 06:33 GMT   |   Update On 2020-09-20 06:33 GMT
பீகார் மாநிலத்தில் தனி ஆளாக நின்று தனது கிராமத்திற்காக கால்வாய் வெட்டிய முதியவருக்கு மகிந்திரா நிறுவனம் டிராக்டர் பரிசளித்துள்ளது.
கயா:

பீகார் மாநிலம் கயா மாவட்டம், கொத்திலாவா கிராமத்தைச் சேர்ந்தவர் லாங்கி புய்யான். முதியவரான இவர் தனது கிராமத்தின் விவசாய தேவைக்காக தனி ஆளாக 3 கிலோ மீட்டர் நீளத்திற்கு கால்வாய் வெட்டி உள்ளார். 

அவரது கிராமத்திற்கு அருகில் உள்ள மலைப்பகுதியில் இருந்து மழைநீர் நேரடியாக கிராமத்தில் உள்ள வயல் வெளிக்கு வருவதற்கும், ஊரில் உள்ள குளத்தில் தேங்குவதற்கும் இந்த பணியை அவர் செய்து முடித்துள்ளார். இதற்காக 30 ஆண்டுகள் அவர் உழைத்துள்ளார். அவர் வெட்டிய கால்வாய் மூலம் தற்போது அந்த ஊருக்கு தண்ணீர் வரத் தொடங்கி உள்ளது. 



லாங்கி புய்யானின் இந்த பணி குறித்து கடந்த சில தினங்களுக்கு முன்பு, புகைப்படங்களுடன் செய்தி வெளியானது. இதனைப் பார்த்த பலரும், லாங்கி புய்யானை பாராட்டி ஊக்கப்படுத்தினர். இந்நிலையில், லாங்கி புய்யானை கவுரவிக்கும் வகையில் மகிந்திரா நிறுவனம் ஒரு டிராக்டரை பரிசாக வழங்கி உள்ளது. 

மகேந்திரா டீலர் சித்திநாத் விஸ்வகர்மா இதுபற்றி கூறுகையில், ‘லாங்கி புய்யான் குறித்த டுவிட்டர் தகவலை பார்த்த ஆனந்த் மகிந்திரா, டிராக்டர் வழங்கப் போவதாக கூறினார். அதன்படி, ஏரியா அலுவலகத்திற்கு தகவல் வந்ததும் டிராக்டர் வழங்கப்பட்டுள்ளது’ என்றார்.
Tags:    

Similar News