செய்திகள்
கோப்பு படம்

உறுப்பினர்களுக்கு பரவும் கொரோனா - பாரளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரை அடுத்த வாரமே நிறைவு செய்ய திட்டம்?

Published On 2020-09-19 15:51 GMT   |   Update On 2020-09-19 15:51 GMT
பாராளுமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்ற உறுப்பினர்கள் சிலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து மழைக்கால கூட்டத்தொடரை திட்டமிட்ட காலத்திற்கு முன்னதாக அடுத்த வாரமே நிறைவு செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
புதுடெல்லி:

பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வழக்கமான ஜூலை மாதம் தொடங்கி ஆகஸ்டு அல்லது செப்டம்பர் வரை நடத்தப்படும். ஆனால், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கூட்டத்தொடர் தொடங்குவதில் கால தாமதம் ஏற்பட்டது.

இதையடுத்து, கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு கடந்த 14-ம் தேதி பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கூட்டப்பட்டது.
இந்த கூட்டத்தொடர் எந்த விடுமுறையும் இல்லாமல் வரும் அக்டோபர் 1-ம் தேதி வரை 18 நாட்கள் தொடர்ந்து நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

தற்போது மழைக்கால கூட்டத்தொடர் இரு அவைகளிலும் கடந்த சில நாட்களாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கூட்டத்தொடரில் பங்கேற்கும்
உறுப்பினர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு கூட்டத்தொடரில் அனுமதிக்கப்பட்டனர்.

ஆனால், பல்வேறு கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்ட போதும் கூட்டத்தொடரில் பங்கேற்ற உறுப்பினர்கள் சிலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

குறிப்பாக பாராளுமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்ற பின்னர் மத்திய மந்திர்களான நிதின் கட்காரி, பிரஹெல்ட் சிங் பட்டேல் ஆகியோருக்கும்
ராஜ்ய சபா எம்.பி.யான வினேய் சஹஷ்ரபதி ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

பாராளுமன்ற செயலக அதிகாரிகளுக்கும், கூட்டத்தொடரை ஒளிபரப்பு செய்யும் பத்திரிக்கையாளர்கள் சிலருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், கூட்டத்தொடரில் பங்கேற்ற எம்.பி.க்கள் பலருக்கும் கொரோனா பரவலாம் என்ற அச்சம் நிலவி வருகிறது. 

இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைக்கால கூட்டத்தொடரை முன்கூட்டியே நிறைவு மக்களவை சபாநாயகரிடம் மத்திய அரசும், எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக மக்களவை சபாநாயகர் உத்தரவின்படி தொழில் ஆலோசனை கவுன்சிலை இன்று கூட்டியது. இந்த கூட்டத்தில் பாராளுமன்ற கூட்டத்தொடரை வரும் வியாழக்கிழமையே (செப்டம்பர் 24) முடித்துக்கொள்ள வேண்டும் என எதிர்க்கட்சிகள், மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக விரைவாக சபாநாயகர் திட்டமிட்டுள்ளார். இதன் மூலம் அக்டோபர் 1-ம் தேதி வரை நடைபெற திட்டமிடப்பட்டிருந்த
பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் திட்டமிடப்பட்ட காலத்திற்கு முன்னதாகவே முடிவுக்கு வரலாம் என தகவல் வெளியாகியுள்ளது. 

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஏற்கனவே காலதாமதமாக தொடங்கிய மழைக்கால கூட்டத்தொடர் தற்போது உறுப்பினர்களுக்கு கொரோனா பரவுவதால் திட்டமிடப்பட்ட அக்டோபர் 1 ஆம் தேதிக்கு முன்னதாகவே வரும் 24-ம் தேதியே நிறைவடையலாம் என்பதால் பல்வேறு மசோதாக்கள் நிறைவேற்றம் மற்றும் ஜிஎஸ்டி பல்வேறு பிரச்சனைகள் குறித்த விவாதங்கள் நடைபெறுவதில் சிக்கல் நிலவலாம் என தகவல் வெளியாகியுள்ளது.   

Tags:    

Similar News